கல்லாங் ஸ்போர்ட்ஸ் சென்டரில் திடீரென மயங்கி கீழே விழுந்த ஆடவர் – சிகிச்சை பலனின்றி மரணம்

man-50-collapsed-kallang-walking-event
Mothership

National Stadium அருகில் கல்லாங் ஸ்போர்ட்ஸ் சென்டரில் உள்ள தடகளத்தில் 5,000 மீட்டர் நடை போட்டியின்போது 50 வயது ஆடவர் ஒருவர் கீழே விழுந்து, பின்னர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் சிங்கப்பூர் தடகளப் போட்டியின் (SA) All Comers Meet 2 நிகழ்வின் போது நேற்று மார்ச் 19, சனிக்கிழமை காலை நடந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்கள் தாராளமாக வர முடியுமா? – Work permit, S Pass ஊழியர்களுக்கு முன் அனுமதி வேண்டுமா?

அந்த ஆடவர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தொடங்கிய முதல் கிலோமீட்டருக்குள் (காலை 8 மணிக்குப் பிறகு) திடீரென கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

அதனை அடுத்து அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனில்லாமல் அவர் இறந்தார்.

ஆம்புலன்ஸ் மற்றும் துணை மருத்துவர்கள் அங்கு வருவதற்கு முன்னர், தடகள இடத்தில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

5,000 மீட்டர் நடை போட்டியில் நான்கு பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். அதில் 18 வயதுடைய மூன்று பேர் மற்றும் தற்போது மரணித்த 50 வயதான லிம் பூன் ஹுவாட்டும் அடங்குவர்.

இந்திய பயணிகளை ஈர்க்க சிங்கப்பூர் திட்டம்: “தமிழ்நாடு தான் டார்கெட்” – மாஸ் காட்டும் தலைநகர் சென்னை!