காரை முறையாக நிறுத்தியவரை தகாத வார்த்தையில் குறிப்பிட்டு அதை காரில் வைத்து சென்ற ஆடவர் – காணொளி

Stomp

கார் ஓட்டுனர் ஒருவர் தனது காரில் மோசமான குறிப்பு ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் (அக்டோபர் 12) மதியம் 12 மணியளவில் தெம்பனீஸ் மாலின் கீழ்தளக் கார்பார்க்கில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

பிறந்தநாளைப்போல தனது இறுதிச் சடங்கிற்கும் ஏற்பாடு செய்த பெண் – 200 லாட்டரி டிக்கட்டுகளை வழங்கினார்

ஆடவர் ஒருவர் காரில் குறிப்பை விட்டுச் செல்வதைக் காட்டும் வீடியோவையும் ஓட்டுநர் ஸ்டாம்ப்-உடன் பகிர்ந்துள்ளார்.

தவறான வார்த்தைகள் அடங்கிய அந்த குறிப்பில், “காரை எப்படி நிறுத்துவது என்று தெரியுமா? ” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Man leaves vulgar note
Stomp

தாம் காரை தவறாக நிறுத்தவில்லை என்றும், சரியாக நிறுத்தியுள்ளேன் என்றும், ஊனமுற்றவர்கள் இடத்திலோ அல்லது பொருள் ஏற்றும் இடத்திலோ நிறுத்தவில்லை என்றும் கார் ஓட்டுநர் ஸ்டாம்பிடம் கூறினார்.

அவரின் அந்த குறிப்பால் நான் அதிர்ச்சியடைந்தேன் என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

அந்த மாமாவுக்கு ஏதாவது பிரச்சனையா? என்ற கேள்வியுடன் அவர் இதனை விளக்கி கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் தாங்கமுடியாத அளவுக்கு வெப்பம் வாட்டுகிறதா? இதோ நல்ல செய்தி