டெலிகிராம் குழுவில் சுமார் 25,000 உறுப்பினர்களுக்கு ஆபாச படங்களைப் பகிர்ந்தவருக்கு சிறை

telegram-group-obscene-material-mens-charged
Illustration image

ஆபாசம் தொடர்பான காணொளிகள் மற்றும் படங்களைப் பகிர்ந்த நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

பிரபல இணையதளத்துடன் தொடர்புள்ள டெலிகிராம் குழுவில் உள்ள அந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவருக்கு இன்று புதன்கிழமை (டிசம்பர் 15) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

16 நாட்கள் உள்நாட்டு விடுமுறையில் செல்லும் சிங்கப்பூர் பிரதமர் லீ

லிங்கன் அந்தோனி பெர்னாண்டஸ் என்ற அவருக்கு எட்டு வார சிறைத்தண்டனை மற்றும் S$20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மின்னணு சாதனங்கள் மூலம் ஆபாசமானவற்றை அனுப்பியதாக இரண்டு குற்றச்சாட்டுகளும், ஆபாச படங்களை வைத்திருந்ததாக ஒரு குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.

31 வயதான சிங்கப்பூரரான அவர், “Sammyboy” இணையதளத்துடன் இணைக்கப்பட்ட குழுவின் ஒருவராக இருந்துள்ளார்.

அவர்களில் ஒருவர் தனது சொந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தேவாலய நண்பர்களின் ஆபாச படங்களை கூட வெளியிட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டில், பெர்னாண்டஸ் சுமார் 25,000 உறுப்பினர்களைக் கொண்ட டெலிகிராம் குழுவின் உறுப்பினர்களுக்கு மூன்று ஆபாசமான படங்களையும் அனுப்பியுள்ளார்.

அக்டோபர் 24, 2019 அன்று, 23 வயதுடைய பெண் ஒருவர் அந்தக் குழுவைப் பற்றி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

அதன் பின்னர், அடுத்த மாதம், பெர்னாண்டஸின் வீட்டிற்கு அதிகாரிகள் சென்றனர், அங்கு 118 ஆபாசமான படங்களை அவர்கள் கண்டுபிடித்தனர்.

மற்ற மூன்று சிங்கப்பூரர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

இன்று புதன்கிழமை தகவலின்படி, பெர்னாண்டஸின் ஜாமீன் S$5,000ஆக நிர்ணயிக்கப்பட்டது, மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்து தண்டனையை அனுபவிக்கும்படி உத்தரவிடப்பட்டது.

சிங்கப்பூரில் சட்ட விரோத செயல் – வெளிநாட்டை சேர்ந்த ஆடவர் கைது