டெலிகிராம் குழுவில் கிடைத்த திருட்டு கிரெடிட் கார்டு விவரம்… ஜாலியாக வாழ்ந்த ஆடவர் – வளைத்து பிடித்த போலீஸ்

scams Suspects investigated
Photo: Pickawood/Unsplash

டெலிகிராம் அரட்டை குழுவில், திருட்டு கிரெடிட் கார்டு விவரங்களை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள டாக்ஸி முன்பதிவுகள் மற்றும் பர்கர் கிங் ஆர்டர்களைச் செய்த ஆடவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

32 வயதான தொடர் குற்றவாளி முஹம்மது சியாவல் கமிஸ் என்ற அவருக்கு இன்று (பிப் 7) ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

“இனிமே கட்டுப்பாடு கிடையாது… தாராளமா வரலாம்” – அறிவிப்பை வெளியிட்டு அசத்திய நாடு

மோசடி செய்தது தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார், மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

திருடப்பட்ட கிரெடிட் கார்டு விவரங்கள், 2020ஆம் ஆண்டு நவம்பர் 21க்கு முன்பு டெலிகிராம் குழுவில் பரப்பப்பட்டது.

அந்த விவரங்களை பயன்படுத்தி அவர் டாக்ஸி முன்பதிவுகள் மற்றும் பர்கர் கிங் ஆர்டர்களைச் செய்ததாக கூறப்படுகிறது.

கிரெடிட் கார்டு மூலம், 2020 நவம்பர் 21 முதல் 2020 டிசம்பர் 23 வரை, சுமார் 34 முறை டாக்ஸி முன்பதிவுகளை அவர் செய்துள்ளார்.

இதனை அடுத்து, சுமார் S$562.91 மதிப்பிலான மோசடி பரிவர்த்தனைகளைக் கண்டறிந்த டாக்சி நிறுவனம், 2021 பிப்ரவரியில் காவல்துறையிடம் புகார் தாக்கல் செய்தது.

விதிகளை மீறி ஒன்று கூடிய வெளிநாட்டவருக்கு S$3,000 அபராதம்..!