“சிறுநீர், மலம் கழிக்க கூட என் மகன் தான் உதவி” – 22 ஆண்டுகளாக தாயை கவனித்து வந்த மகன் தூக்கத்திலேயே மரணம்… வங்கிக் கணக்கில் $6 மட்டுமே; எனக்கு இனி யார் இருக்கா? கண்ணீருடன் தாய்

Man vomits blood dies sleep $6 bank account

சிங்கப்பூரில் சுமார் 22 ஆண்டுகளாக தன் அம்மாவை கவனித்து வந்த மகன், தற்போது அம்மாவை தனியாக தவிக்கவிட்டு இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி நம்மை பெரும் கவலையில் ஆழ்த்துகிறது.

64 வயதான ஜென்னி கோ என்ற பெண்மணி தனது மகன் குவோ என்பவரை சார்ந்தே வாழ்ந்து வந்தார், தன் அம்மாவின் அனைத்து அன்றாட பணிகள் மற்றும் செயல்பாடுகளுக்கும் குவோ உதவியாக இருந்து வந்தார்.

சிங்கப்பூர் முழுவதும் நள்ளிரவில் வெளுத்துவாங்கிய கனமழை: சில்..சில்! கூல்..கூல்!! கிளைமேட் – பொதுமக்கள் மகிழ்ச்சி!

அதாவது குறிப்பிட்டு சொல்லப்போனால், தன் அம்மாவை தினமும் காலையில் கழிவறைக்கு கொண்டு செல்வதில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்து வந்துள்ளார் தங்க மகன்.

ஆனால் இதையெல்லாம் தன் அம்மாவுக்கு ​​செய்ய அவர் தற்போது இல்லை என்று சொல்லும்போதே நமக்கு கண்ணீர் வருகிறது.

35 வயதுடைய மகன், நேற்று முன்தினம் (ஜூலை 18) திடீரென தூக்கத்தின்போது இரத்த வாந்தி எடுத்து இறந்தார். அவரது தாயை தனியே தவிக்கவிட்டு இறைவனிடம் சென்றார்.

குவோ இறந்து கிடந்தது, அன்று காலை 7.30 மணியளவில் அவர்களது அண்டை வீட்டுக்காரர் ஒருவரால் கண்டறியப்பட்டது.

“நான் எப்போதும் அவருக்கு காலை வாழ்த்து சொல்வேன். அப்போது அம்மா இன்னும் தூங்கிக்கொண்டிருப்பதாகச் சொல்லி, அமைதியாக இருக்கச் சொல்வார்.”

“ஆனால், அன்று (ஜூலை 18), நான் அவருக்கு 10 முறைக்கு மேல் அழைத்தும் யாரும் பதில் கூறவில்லை” என்றார்.

மார்சிலிங்கில் உள்ள HDB வாடகை குடியிருப்பில் அவர்கள் ஒன்றாக வசித்து வந்தனர், தற்போது தன் மகன் தனியே தவிக்கவிட்டு சென்றதால் என்ன செய்வது என்று தெரியாமல் கோ தவிப்பதாகவும், தனது வங்கிக் கணக்கில் $6 மட்டுமே இருப்பதாகவும் கவலையுடன் பகிர்ந்து கொண்டார்.

“அம்மா என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு நகருவதில் சிரமம் உள்ளது. தினமும் காலையில் சிறுநீர் கழிப்பதற்கும், மலம் கழிப்பதற்கும் நான் அவரையே நம்பியிருக்கிறேன். இப்போது அவர் இல்லாததால், நான் உண்மையிலேயே மனம் உடைந்துவிட்டேன். எதிர்காலத்தில் நான் என்ன செய்ய போகிறேன்?” என்று அழுது கொண்டே பேட்டியளித்தார் அவர்.

அம்மாக்களை உதாசீனப்படுத்தும் இந்த காலக்கட்டத்தில் தன் அம்மாவுக்கு இன்னொரு அம்மாவாக வாழ்ந்த அந்த தங்க மகன் ஆன்மா சாந்தியடைய இறைவன் அருள் புரியட்டும்.

சிங்கப்பூரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பிரபல உணவகத்தின் உரிமையாளர் காலமானார்