சிங்கப்பூரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பிரபல உணவகத்தின் உரிமையாளர் காலமானார்

afghanistan-family-restaurant-owner-died
Fawaidul Mukhtarah/FB & Emily F on Google Maps

சிங்கப்பூரில் இயங்கிவரும் ஆப்கானிஸ்தான் ஃபேமிலி ரெஸ்டாரன்ட் (Afghanistan Family Restaurant) என்ற கடையின் உரிமையாளர் காலமானார்.

நேற்று திங்கள்கிழமை (ஜூலை 18) உயிரிழந்த அவருக்கு வயது 73 எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

“சம்பளம் சரியாக கொடுப்பதில்லை.. வேலைல இருந்து தூக்கிட்டாங்க..” சிங்கப்பூரில் ஊழியர்கள் வைக்கும் புகார்கள் – MOM ரிப்போர்ட்

நுரையீரல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட மஹ்மூத் அப்துல்லா என்ற அவர், நேற்று அதிகாலை 4:19 மணிக்கு மருத்துவமனையில் காலமானார்.

அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

அவரது மூத்த மகன் மொபின் மஹ்மூத் கூறுகையில்; தனது தந்தை 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறினார்.

அவர் நல்ல மனிதர் என்றும், எங்களுக்கு ஒரு நல்ல தந்தையாக இருந்தார் என்றும், அதே போல் “அன்பான, அக்கறையுள்ள, மற்றும் மற்றவர்களை சிரிக்க வைக்க கூடிய நபர்” என்றும் மொபின் விவரித்தார்.

ஆப்கானிஸ்தான் ஃபேமிலி ரெஸ்டாரன்ட் முதன்முதலில் 1967 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

தற்போது 201E Tampines Street 23ல் அமைந்துள்ள இந்த உணவகம், லக்சா, நாசி லெமாக் மற்றும் ரொட்டி பரோட்டா உள்ளிட்ட பல்வேறு முஸ்லீம் உணவுகளை விற்பனை செய்கிறது.

‘அந்தரங்க உறுப்புகளை வீடியோ எடுப்பதே தவறு.. அதை Tiktokல் பதிவேற்றம் செய்வது மகா தவறு..’ – சிக்கிய பணிப்பெண்