“சம்பளம் சரியாக கொடுப்பதில்லை.. வேலைல இருந்து தூக்கிட்டாங்க..” சிங்கப்பூரில் ஊழியர்கள் வைக்கும் புகார்கள் – MOM ரிப்போர்ட்

Budget 2024 foreign workers
Pic: AFP

சிங்கப்பூரில் சம்பளம் தொடர்பான புகார்கள் மற்றும் தவறாக பணிநீக்கம் தொடர்பாக குறைவான ஊழியர்கள் மட்டுமே கடந்த ஆண்டு புகார்கள் செய்துள்ளதாக அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார மீட்சிக்கு மத்தியில் இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக தரநிலைகள் மேம்பட்டதால் புகார்கள் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொற்றுநோய்: சிங்கப்பூரில் உயிரிழந்த 4 வயது பெண் குழந்தை – MOH அளித்த தகவல்

மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் சர்ச்சைகளை தீர்த்துவைக்கும் முத்தரப்பு கூட்டணி (TADM) ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்ட இத்தகைய புகார்களின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் நேற்று திங்கட்கிழமை (ஜூலை 18) வெளியிடப்பட்டது.

ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு தொடர்பாக புகார்கள் மற்றும் மேல்முறையீடுகளின் எண்ணிக்கை 2020ல் 2.59 ஆக பதிவானது. கடந்த 2021 ஆம் ஆண்டு அது 1,000 ஊழியர்களுக்கு 1.73 ஆக கணிசமான முறையில் சரிவை சந்தித்துள்ளது.

அதாவது, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான புகார்களிலும் இந்த சரிவு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதில் சம்பளம் தொடர்பாக பதிவான புகார்கள் 4,848 மற்றும் பணிநீக்கம் தொடர்பாக புகார்கள் 922 என மொத்தம் 5,882 வேலைவாய்ப்பு புகார்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாசிர் ரிஸ் பார்ம்வேயில் மூடப்படும் மீன் பண்ணை… S$20,000க்கு பதில் S$2,500 – அனைத்தும் தள்ளுபடி விலையில்!