20 லாட்டரி சீட்டுகளை வாங்கி, அனைத்திலும் வெற்றி… $100,000 டாலரை தட்டி சென்ற அதிஷ்டசாலி!

Man Wins $100,000 With 20 Identical Lottery Tickets
pixabay

Pick 4 அதிஷ்ட குலுக்கலில் ஒரே மாதிரியான 20 லாட்டரி சீட்டுகளை வாங்கி, அவை அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார் அதிர்ஷ்டசாலி அமெரிக்க நபர் ஒருவர்.

அவர் அதன் மூலமாக மட்டும் சுமார் $100,000 என்ற பெரும் தொகையை வென்று பிரம்மிக்க வைத்துள்ளார்.

வர்ஜீனியாவின் அலெக்ஸாண்ட்ரியாவைச் சேர்ந்த ஃபெக்ரு ஹிர்போ என்ற நபர், Pick 4 குலுக்கலில் 20 டிக்கெட்டுகளை வாங்கினார். அவை அனைத்திலும் 2-5-2-7 என்ற நான்கு இலக்க அதிஷ்ட எண்கள் இருந்துள்ளது.

20 டிக்கெட்டுகளுக்கும் அவர் $100,000 வென்றுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. ஏனெனில் Pick 4 கேமின் பரிசு $5,000 ஆகும்.

அவர் தனது டிக்கெட்டுகளை, ஆர்லிங்டனில் உள்ள 4060 சவுத் ஃபோர் மைல் ரன் டிரைவில் அமைந்துள்ள ஃபோர் மைல் ரன் ஷெல்லில் வாங்கினார்.

தற்போது வெற்றி பணத்தை செலவு செய்ய உடனடித் திட்டம் எதுவும் தன்னிடம் இல்லை என்றார்.