சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் குடிபோதையில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியவருக்கு சிறை..!

Man’s drunken behaviour ‘affected safety’ of everyone on SIA flight

Singapore Airlines : சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் குடிபோதையில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்ட ரஷ்ய நாட்டை சேர்ந்த ரோமன் (37 வயது) என்பவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 10) அன்று மூன்று வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி மாஸ்கோவிலிருந்து சிங்கப்பூர் செல்லும் SQ 361 விமானத்தில், இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா; பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..!

விமானத்தில் மது அருந்தி, அதிகாலை 1 மணியளவில், அவர் சக பெண் பயணிகளிடம் தகராறு செய்ய தொடங்கியதும், அவர்களின் கணவர்கள் விமானக் குழுவினரிடம் இதுபற்றி கூறினர், அதை தொடர்ந்து ரோமன் மீண்டும் தனது இருக்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பிறகு தன்னுடைய இருக்கைக்கு சென்றதும், அவர் சத்தம்போட ஆரம்பித்துள்ளார், இது மற்ற பயணிகளின் தூக்கத்தை தொந்தரவு செய்துள்ளது.

அதன் பிறகு, தொடர்ந்து ரகளை செய்து வந்த ரோமன், சிங்கப்பூரில் விமானம் தரையிறங்கிய போது கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா; பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..!

ரோமன், ரஷ்யாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக தாய்லாந்துக்கு சென்று கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சகபயணிகளுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், விமானத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதற்காகவும் ரோமனுக்கு 3 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.