சிங்கப்பூரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா; பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..!

MGR birthday celebration in Singapore

MGR Birthday Function in Singapore: தமிழகத்தின் பெரும் தலைவர்களின் ஒருவரான எம்ஜிஆர் அவர்களின் 103-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சிங்கப்பூரில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சி வரும் ஜனவரி, 19 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2.30 மணிக்கு சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழக கலைஞர்கள் வழங்கும் ‘காவியத் தலைவனின் காலத்தை வென்றவன் நீ பாகம்-2’ கலை நிகழ்ச்சியும் மற்றும் மூத்த கலைஞர்களை சிறப்பித்து நினைவுப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

இதையும் படிங்க : தாம்சன் – ஈஸ்ட்கோஸ்ட் ரயில் பாதையின் முதல் 3 நிலையங்கள் திறப்பு; உட்லேண்ட் வாசிகள் மகிழ்ச்சி..!

இந்த விழாவை அன்னை சாரதா மூவிஸ் தென்னிந்தியா மற்றும் எம்ஜிஆர் ஈவன்ட் புரமோட்டர்ஸ் சிங்கப்பூர் ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுடன் கலந்துகொள்கிறார்கள். இந்த 50க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு பாராட்டு பட்டயமும் விருதுகளும் வழங்கப்படுகின்றன.

இதில் அனுமதிக்கான டிக்கெட் கட்டணத்தொகை முழுவதும் முதியோர் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூருக்கு F-35B போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு அனுமதி..!

சிங்கப்பூரில் எண்; 100, அட்மிரலிட்டி சாலையில் அமைந்துள்ள மார்சிலிங் கம்யூனிட்டி கிளப்பில் (MARSILING COMMUNITY CLUB) இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு தமிழ் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.