சிங்கப்பூர் Maple Bear பாலர் பள்ளியில் தீடீர் தீ விபத்து.! (காணொளி)

Maplebear school fire accident
Pic: Screenshot/stylox Adel

சிங்கப்பூர் பாசிர் பாஞ்சாங் (Pasir Panjang) சாலையில் உள்ள Maple Bear பாலர் பள்ளியில் நேற்று (ஆகஸ்ட் 10) இரவு சுமார் 7 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

243, பாசிர் பாஞ்சாங் சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த SCDF படையினர் இரண்டு தண்ணீர் ஜெட்கள் மூலம் உடனடியாக தீயை அணைத்தனர்.

கலவரத்தில் ஈடுபட்டதாக 6 ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு – 7 ஆண்டுகள் சிறைக்கு வாய்ப்பு

Maple Bear பாலர் பள்ளியில் தீ ஏற்பட்டபோது, அங்கு யாரும் இல்லை என்றும், பள்ளியின் முன்பகுதியில் மட்டுமே தீ பரவி இருந்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியுள்ளது.

மேலும், Maple Bear பாலர் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

Maple Bear பாலர் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து காணொளி..

உலகளவில் மக்கள் அதிகமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் 2ஆம் இடம்!