கலவரத்தில் ஈடுபட்டதாக 6 ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு – 7 ஆண்டுகள் சிறைக்கு வாய்ப்பு

மோட்டார் சைக்கிளை திருடி
File Photo : Singapore Police arrested

யுஷுன் ஸ்ட்ரீட் 11ல், 19 – 27 வயதிற்குட்பட்ட ஆறு ஆடவர்கள் மீது கலகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் காவல் படை இன்று (ஆக.10) தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி நள்ளிரவு சுமார் 12:20 மணியளவில், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உதவி வேண்டி அழைப்பு வந்தது.

“ஃபைசர்-பயோன்டெக்” தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்பதிவு இன்று முதல் (ஆக.10) தேவையில்லை!

அங்கு காயமடைந்த நிலையில் 26 வயதான ஆடவர் ஒருவரை அதிகாரிகள் கண்டறிந்தனர். பின்னர் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

விசாரணைகளுக்குப் பிறகு, இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஆறு பேரின் அடையாளங்களை உட்லேண்ட்ஸ் காவல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கண்டறிந்தனர்.

பின்னர், அவர்கள் கலவர வழக்கில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

அதனை அடுத்து, 24 வயதுடைய ஆடவர் ஒருவர், அதே நாளில் (ஆக. 7) கலகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

மீதமுள்ள ஐந்து பேர் மீது நேற்று (ஆக. 9) அதே குற்றத்திற்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பொதுமக்கள் உணவு மற்றும் பான நிலையங்களில் அமர்ந்து சாப்பிடலாமா?