மார்ச் 19- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை!

Photo: Sri Sivan Temple

சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple). இந்த கோயில், 24 கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ 2- ல் (24 Geylang East Ave 2) அமைந்துள்ளது. இந்த கோயிலில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு செல்வர். விசேஷ நாட்களில் ஸ்ரீ சிவன் கோயிலில், சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

லாசரஸ் தீவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறு வீடுகள்….மே 1 முதல் பொதுமக்கள் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்!

அந்த வகையில், வரும் மார்ச் 19- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை நடைபெறவுள்ளது. இந்த நாளில், அபிஷேக பொருட்களுக்கும், வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் https://sst.org.sg/ எனும் கோயில் இணையப் பக்கத்தில் பதிவுச் செய்துக் கொள்ளலாம். பின்னர், உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேக பொருட்களும் மற்றும் வில்வ அர்ச்சனையை செலுத்திவிடுவார்கள்.

நோன்பு பெருநாள் முன்னிட்டு உரிமம் இல்லாமல் இயங்கிய 24 கடைகளுக்கு செக்

பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷ பூஜையைப் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 67434566 என்ற கோயில் அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் என இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது.