மார்கழி மாதத்தையொட்டி, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் பூஜை நேரங்கள் அறிவிப்பு!

Photo: Sri Srinivasa Perumal Temple

 

மார்கழி மாதம் பிறந்துள்ள நிலையில், சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் பூஜைகள் நடைபெறும் நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

4 லாரி விபத்தில் உயிரிழந்த ஊழியர் “மெக்கானிக்காக” பணிபுரிந்தவர் – 2 மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது

இது குறித்து இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் டிசம்பர் 17- ஆம் தேதி முதல் ஜனவரி 14- ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும் நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாரத்தில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 05.00 மணிக்கு கோயில் நடைத் திறக்கப்பட்டு, காலை 05.30 மணிக்கு விஸ்வரூபமும், திருப்பள்ளி எழுச்சிப் பூஜையும், காலை 08.00 மணிக்கு நித்திய பூஜையும், காலை 11.00 மணிக்கு உச்சிக்கால பூஜையும் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை தவிர), மாலை 06.00 மணிக்கு நித்திய பூஜையும், இரவு 08.30 மணிக்கு அர்த்தஜாம பூஜையும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜையும், சனிக்கிழமை மட்டும் மாலை 05.30 மணிக்கு நித்திய பூஜையும், இரவு 09.00 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகிறது.

சிங்கப்பூர் வந்த ஸ்கூட் விமானத்தில் 3 பயணிகளிடம் கைவரிசை காட்டிய வெளிநாட்டு பயணி

திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 05.00 மணி முதல் காலை 11.00 மணி வரையும், மாலை 06.00 மணி முதல் இரவு 08.30 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் காலை 05.00 மணி முதல் காலை 11.30 மணி வரையும், மாலை 05.30 மணி முதல் இரவு 09.00 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். எனினும், சிறப்பு நிகழ்வு நாட்களில் கோயில் மூடப்படும் நேரம் மாற்றங்களுக்கு உட்பட்டது. மார்கழி மாத பூஜைகளில் பகதர்கள் கலந்து கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.