மெரினா பே சாண்ட்ஸின் 4வது கோபுர கட்டடம்: 587 ஹோட்டல் அறைகள்.. 12,000ச.மீ பரப்பளவில் சில்லறை வர்த்தகம் – மாஸ் காட்டும் திட்டம்

marina-bay-sands-fourth-tower-expansion
Photo: Marina Bay Sands

மூன்று கட்டடங்களுடன் பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் மெரினா பே சாண்ட்ஸ்க்கு (MBS) 4வது கட்டடம் கட்ட நகர மறுசீரமைப்பு ஆணையம் (URA) அனுமதி அளித்துள்ளது.

நான்காவது கோபுர கட்டடத்தில் சுமார் 587 ஹோட்டல் அறைகள் உருவாகும் என சொல்லப்பட்டுள்ளது.

தனது மகளையே பலமுறை நாசம் செய்ய முயன்ற சிங்கப்பூரர்.. 13 ஆண்டுகள் சிறை, 16 பிரம்படிகள் விதிப்பு

அதாவது Bayfront Avenue, Sheares Avenue மற்றும் Sheares Link ஆகியவற்றின் அருகே உள்ள காலி எல்லை பகுதியில் நான்காவது கோபுர கட்டடத்தை கட்ட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டடத்தில் 153,100 சதுர மீட்டர் பரப்பளவில் ஹோட்டல் அமைக்கப்படும் என்றும், அதில் சுமார் 587 அறைகள் இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

மேலும், 12,185 சதுர மீட்டர் பரப்பளவில் சில்லறை வர்த்தகத்துக்கான இடமும் அமையும் என்றும் URA தரவுகள் கூறுகிறது.

முன்னர் 1,000 அறைகள் அமையும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 587 ஆகக் குறைப்பது குறித்து கேள்விகேட்டபோது, ​​MBS கூடுதல் தகவல்களை வழங்க மறுத்துவிட்டது.

2028 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 வரை அதனை கட்டி முடிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

3 டிரக், 2 கார்கள் மோதி விபத்து.. டிரக் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்