நான் என்ன ATM மெஷினா? – மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற கணவர்;அர்த்தமற்றுப் போன திருமண வாழ்க்கை!

marriage

சிங்கப்பூரில் செல்லப்பிராணிகளான நாய்க்குட்டிகளைச் சொந்தப் பிள்ளைகள் போல் வளர்த்து,வேலைக்குச் செல்ல மறுப்பு தெரிவித்த மனைவியை கணவர் விவாகரத்துச் செய்துள்ளார்.

குடும்ப நீதிமன்றத்தில் மனு அளித்த கணவருக்கு சாதகமாக விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.அந்த நபரின் வயது பெயர் வெளியிடப்படவில்லை.இருவருக்கும் 2008-இல் திருமணம் நடந்தது.2013ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து கணவன்-மனைவியாகச் சேர்ந்து வாழ்வதை அவர்கள் நிறுத்திவிட்டனர்.

திருமணமாகிதம்பதியனருக்கு குழந்தைகள் இல்லை.விவாகரத்தில் இரு தரப்பினரும் இணக்கமான தீர்வை எட்ட முடியாததால் கணவர் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர் மனைவிக்கு எதிரான விவாகரத்து நடவடிக்கைகளைத் தொடங்கினார்.

கருத்து வேறுபாடு,சண்டை போன்றவற்றினால் அவர்களிடையே விரிசல் ஏற்பட்டது.இதனால் ஆடவர் அவருடைய பெற்றோரின் வீட்டுக்குத் திரும்பினார். ஆனாலும் மனைவிக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க உதவி வந்த கணவர் மனைவி தம்மைத் போல நடத்தியதாகவும் கூறினார்.

தானியங்கு வங்கி இயந்திரத்தைப் போல நடத்தியதாகவும் புகாரளித்தார்.திருமண வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க வேண்டியதில்லை.இருவரும் அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்ந்திருப்பதாக நீதிபதி குறிப்பிட்டார்.மேலும்,மனைவி கணவனுக்கு 8,500 வெள்ளி வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.