சிங்கப்பூரில் சுமார் 3.1 மில்லியனுக்கும் அதிகமான இலவச முகக்கவசங்கள் விநியோகம்

foreign workers FIN mask scam
Mothership

தெமாசெக் நிறுவனத்தின் சமீபத்திய இலவச முகக்கவச விநியோக ஏற்பாட்டில் சுமார் 3.1 மில்லியனுக்கும் அதிகமான முகக்கவசங்களை குடியிருப்பாளர்கள் பெற்றுள்ளனர்.

அந்நிறுவனத்தின் இலவச முகக்கவச விநியோகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 23) முடிவடைந்தது.

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி இளைஞரின் மரண தண்டனை வழக்கு: ஜன.24 மேல்முறையீடு விசாரணை என்ன ஆனது?

இந்தமுறை குடியிருப்பாளர்கள் பெற்றுக்கொண்ட முகக்கவசங்களின் எண்ணிக்கை குறைவாக பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சுமார் 4.1 மில்லியன் முகக்கவசங்கள் விநியோகம் செய்யப்பட்டதாக அந்நிறுவன செய்தி தொடர்பாளர் கூறினார்.

இதில், 23,000 முகக்கவசங்கள் முன்கூட்டிய ஆர்டர்கள் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டள்ளது என்று அவர் கூறினார்.

கடந்த ஜனவரி 10 அன்று தொடங்கிய தெமாசெக் அறக்கட்டளையின் ஆறாவது முகக்கவச விநியோகம் இரண்டு வாரங்கள் நடந்தது.

பயனியர் சாலை அருகே தொழிற்சாலை கட்டிடத்தில் தீ விபத்து – கட்டுமானக் கழிவுகளின் பெரும் குவியலில் பற்றிய தீ