பாலியல் கிளர்ச்சி சேவைகளை வழங்கும் மசாஜ் பார்லர்கள்: “ஏஜென்சிக்கு S$10,000 கட்டி வருகிறோம்” – பெண் ஊழியர்களின் பேட்டி

Google streetview / Andrew Koay

சீன நாளிதழின் நிருபர் மேற்கொண்ட விசாரணையின்படி, சிங்கப்பூர் முழுவதும் உள்ள பல கடைகளில் பாலியல் கிளர்ச்சியூட்டுகிற சேவைகள் வழங்கப்படுவதாக கூறினார்.

அந்த கடைகள்; மசாஜ் பார்லர்கள், நெயில் சலூன்கள் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவ (TCM) நிலையங்கள் போன்றவையாக செயல்படுகின்றன, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு ஊழியர் தனது “தடுப்பூசி நிலையை” மற்றொரு ஊழியர் பயன்படுத்த அனுமதித்ததாக குற்றச்சாட்டு

இந்தக் கடைகளில் அதிகமானவை ஷாப்பிங் மால்களில் காணப்படுகின்றன, அதாவது பீப்பிள்ஸ் பார்க் சென்டர், பார்க்லேன் ஷாப்பிங் மால், ஃபார் ஈஸ்ட் பிளாசா மற்றும் எக்செல்சியர் ஷாப்பிங் சென்டர் போன்ற ஷாப்பிங் மால்கள் அதில் அடங்கும்.

மேலும், மூன்று முதல் 10 பார்லர்கள் ஒரே மாலில் அமைந்துள்ளன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கடைகளில் ஒன்றில் மசாஜ் செய்பவர் உட்பட பல உள்-ஊழியர்களிடம் அந்த நிருபர் பேசினார். வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் சுயவிவரம், வணிக வேண்டுகோள் பற்றிய கூடுதல் விவரங்களை உள்-ஊழியர்கள் அளித்தனர்.

சீன நாட்டை சேர்ந்த மசாஜ் செய்பவரின் கூற்றுப்படி, அத்தகைய நிலையங்களில் ஊழியர்கள் முடிந்தவரை பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும், பிடிபட்டால் நாடு கடத்தப்படுவதாகவும் கூறினார்.

மசாஜ் செய்பவரின் பின்னணியைப் பொறுத்தவரை, அவர் Work permit அனுமதியுடன் சிங்கப்பூர் வந்திருப்பதாகவும், ஏஜென்சிக்கு முன்கூட்டியே S$10,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியதாகவும் நிருபர் விவரித்தார்.

நூற்றுக்கணக்கான டாலர்களை சம்பாதிப்பதற்காக இந்த வேலையில் இருக்கும் பெண், ஒரு இரவில் இரண்டு வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று மற்றொரு கடைகளில் பணிபுரியும் உள்-ஊழியர் கூறினார்.

வாடிக்கையாளர்கள் தாராளமாக இருந்தால், ஒரு மாதத்தில் S$10,000க்கு மேல் சம்பாதிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான கடைகள் பெரும்பாலும் மால்களின் உயரமான தளங்களிலும், அதிக தொலைதூர இடங்களிலும் அமைந்துள்ளதாகவும் நிருபர் சுட்டிக்காட்டினார்.

சிலோசோ பீச்சில் நீரில் மூழ்கியதாக கூறப்படும் சிறுமி… என்ன நடந்தது? (வீடியோ இணைப்பு)