‘MENDAKI’ கல்வி அறக்கட்டளைக்கு 40,000 வெள்ளியை நன்கொடையாக வழங்கியது ‘FairPrice’ குழுமம்!

Photo: FairPrice

ரமலான் மாதம் தொடங்கியதையொட்டி, ‘FairPrice’ குழுமம் 15ஆவது ஆண்டாக முஸ்லீம் வாடிக்கையாளர்கள் நோன்பு துறக்க பேரீச்சம் பழங்கள், பானங்கள், திண்பண்டங்கள் ஆகியவற்றை இலவசமாகக் கொடுத்து வருகிறது. இது மாலை தொழுகைக்கு அரை மணிநேரத்துக்கு முன் ‘FairPrice’ குழுமத்துக்கு சொந்தமான 60 கடைகளில் இத்தகைய வசதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், சனிப்பெயர்ச்சி விழா!

முஸ்லீம் சமூகத்தின் குறைந்த வருமானக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்விக்கு ஆதரவு வழங்கும் வகையில், கல்வி அறக்கட்டளைகளுக்கு ‘FairPrice’ குழுமம் நன்கொடைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில், மார்ச் 26- ஆம் தேதி அன்று ‘Our Tampines Hub’- ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமுதாய, குடும்ப மேம்பாட்டுத்துறை அமைச்சர் மசகோஸ் ஸூல்கிஃப்லி (Minister for Social and Family Development Masagos Zulkifli) மற்றும் ‘FairPrice’ குழுமத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்!

நிகழ்ச்சியில் ‘MENDAKI’ கல்வி அறக்கட்டளைக்கு ‘FairPrice’ குழுமம் சார்பில் சுமார் 40,000 வெள்ளி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை, கடந்த ஆண்டு வழங்கியதை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.