சரக்கு லிப்ட்க்குள் ஜாலிக்காக சென்ற ஆடவர்கள் – இறுதியில் சிக்கிக்கொண்ட விபரீதம்

3 men get stuck in cargo lift
Google Maps

சிங்கப்பூரில் ஜனவரி 3 அன்று புக்கிட் பாத்தோக் தொழிற்பேட்டையில் உள்ள ஓட்டலுக்குச் மூன்று ஆடவர்கள் சென்றுள்ளனர்.

ஓட்டலுக்கு சரக்குகளை எடுத்துச்செல்லும் லிப்ட்டில் சென்றபோது, ​​அந்த மூன்று பேரும் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

வைரஸின் தாக்கம் குறிப்பிடப்படாத நிலை…சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் – எச்சரிக்கும் நாடு

இறுதியாக அவர்கள் மூவரும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) மற்றும் அந்த கட்டிடத்தின் நிர்வாகத்தால் பத்திரமாக காப்பாற்றப்பட்டனர்.

என்ன நடந்தது?

23 வயதுடைய அந்த மூன்று நபர்களும், தொழில்துறை கட்டிடத்தின் 8வது மாடியில் அமைந்துள்ள புதிய கஃபேவான Coexist Coffee Co.விற்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர் மதர்ஷிப்பிடம் இதுபற்றி கூறுகையில், பயணிகள் லிப்ட் இருந்தும், சரக்கு லிப்ட்டுக்குள் ஜாலிக்காக செல்ல முடிவு செய்ததாக கூறினார்.

சிறிது நேரத்திற்கு முன்பு, சரக்கு லிப்டில் இருந்து இருவர் இழுபெட்டியுடன் வெளியேறுவதையும் அவர்கள் கவனித்துள்ளனர்.

அவர்கள் ஏறியதும் மேலே சென்ற லிப்ட், பின்னர் திடீரென்று இரண்டாவது மாடியில் நின்றது. கதவுகள் திறக்கும் என எதிர்பார்த்து இருந்த அவர், சிறிது நேரம் கழித்து லிப்ட்டில் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்தனர்.

அதனை அடுத்து ஏறக்குறைய அனைத்து தெரிந்தவர்களுக்கும் கால் செய்தும் யாரும் எடுக்கவில்லை, இறுதியாக அவர் SCDF இன் உதவியைப் பெற முடிவு செய்து, 995 எண்ணை அழைத்தனர்.

இறுதியாக SCDF வந்து அவர்களை பொறுமையாக இருக்கும்படி கூறி, பத்திரமாக மீட்டனர்.

வழக்கமான சர்வதேச விமானங்கள் மீண்டும் எப்போது தொடங்கும்?