மெர்லியன் சிலை மூடல் – புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை

Merlion to undergo maintenance works on Jul. 27-28 after cracks seen on its back
闫货货 & 老猫M/Xiaohongshu

மெர்லியன் பூங்காவில் அமைந்துள்ள சிங்கப்பூரில் முக்கிய சின்னங்களின் ஒன்றான மெர்லியன் சிலைக்கு இரண்டு நாட்களுக்கு விடுப்பு விடப்படுகிறது.

பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் இன்று ஜூலை 27 முதல் நாளை ஜூலை 28, 2023 வரை அது மூடப்பட்டு இருக்கும் என சிங்கப்பூர் பயணத்துறை கழகம் (STB) அறிவித்துள்ளது.

“வெளிநாட்டு ஊழியர்களுக்காக இதை செய்தாக வேண்டும்” – நாளுக்கு நாள் வலுக்கும் கோரிக்கை

பராமரிப்பு பணிகள் எதற்காக நடைபெறுகிறது என STB குறிப்பிடவில்லை என்றாலும், சிலையில் விரிசல் ஏற்பட்டதாகவும் அதனால் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாகவும் சீன ஊடகமான Xiaohongshu தெரிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பிரதான மெர்லியன் சிலை சுற்றி மூடப்பட்டிருக்கும் என்றும், புகைப்படம் எடுப்பதற்கும் அனுமதி கிடையாது என்றும் STB தெரிவித்துள்ளது.

இருப்பினும், மெர்லியன் பூங்காக்கு அருகிலுள்ள சிறிய மெர்லியன் சிலையுடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள எந்த தடையும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

முதலாளி வீட்டில் கைவரிசை காட்டிய வெளிநாட்டு பணிப்பெண்… S$50000 ரொக்கம் நகைகள் திருட்டு