“வெளிநாட்டு ஊழியர்களுக்காக இதை செய்தாக வேண்டும்” – நாளுக்கு நாள் வலுக்கும் கோரிக்கை

migrant workers little india bus service extended
(Photo: Today)

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் மேம்பட்ட பாதுகாப்புத் தரநிலைகள் வேண்டும் என அழைப்பு விடுக்கும் இரண்டாவது அறிக்கை புதன்கிழமை காலை வெளியானது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் கோரிக்கை எழுந்த நிலையில், பாதுகாப்பு கோரி மற்றொரு குழு கையொப்பமிட்ட வேறொரு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டது.

முதலாளி வீட்டில் கைவரிசை காட்டிய வெளிநாட்டு பணிப்பெண்… S$50000 ரொக்கம் நகைகள் திருட்டு

“Lorry rides, Save Workers Lives – Ban Them Immediately” என்ற தலைப்பிலான அந்த கடிதம், சமூக அமைப்புகள் மற்றும் மனித உரிமைக் குழுக்கள் உள்ளிட்ட 53 குழுக்கள் சார்பில் வெளியாகியுள்ளது.

ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச் செல்வதைத் தடைசெய்ய கால வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்று 47 குழுக்கள் மற்றும் தனிநபர்கள் இணைந்து முன்னர் கோரிக்கை மனு வெளியிட்டனர்.

சமீபத்திய அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளது?

வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச் செல்வதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பான பயண நடைமுறைகளுக்கு மாறுவதில் நிறுவனங்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சியை போக்குவரத்து அமைச்சகம் அமைத்து தர வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படாதது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் 40க்கும் மேற்பட்ட அமைப்புகள்.. “ஊழியர்களை லாரியில் ஏற்றக்கூடாது” – பிரதமருக்கு மனு

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் வேலை செய்ய “பெஸ்ட் நிறுவனம்” எது ? – நல்ல சம்பளம், சமமாக நடத்துதல், முன்னேற்றம்