அடுத்த இரண்டு வாரங்களுக்கு சிங்கப்பூரின் வானிலை…!

Met Service forecasts wet weather this Christmas

சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பெரும்பாலான நாட்களில், பிற்பகல் நேரத்தில் மழை பெய்யும் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மழை மிதமானதாகவோ, இடியுடன் கூடிய கனமழையாகவோ இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சில நாட்களில், மாலை நேரம் வரை மழை நீடிக்கலாம், என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

கூடுதலாக, கிறிஸ்துமஸ் விழாக் காலத்தின் போது மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

பெரும்பாலான நாள்களில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸுக்கும் 33 டிகிரி செல்சியஸுக்கும் இடைப்பட்டிருக்கும்.

மேலும், சில நாள்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாத இறுதி இரண்டு வாரங்களுடன் ஒப்பிடும்போது, இந்த டிசம்பர் மாதத்தில் முதல் பதினைந்து நாட்களில் சிங்கப்பூர் முழுவதும் குளிரான வெப்பநிலை காணப்பட்டது.

மிகக் குறைந்த தினசரி அதிகபட்ச வெப்பநிலை 25.2 ° C டிசம்பர் 15 அன்று சாங்கியில் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.