டிப்பர் லாரியில் இருந்து சரிந்த உலோகக் குழாய்கள்.. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்

Metal pipes slide off tipper truck
SG Road Vigilante

டிப்பர் லாரியில் ஏற்றிச்செல்லப்பட்ட உலோகக் குழாய்கள் சாலையில் சரிந்து விழுந்ததில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திடீரென சரிந்த குழாய்களால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

வெளிநாட்டு ஊழியர்களே சலுகையை பயன்படுத்துங்க.. இனி வெறும் S$15 செலுத்தி இந்த சேவையை பெறலாம்!

குழாய் கீழே விழுந்த நேரத்தில் அதன் அருகே சென்ற கார் ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு காரை சட்டென்று வளைத்ததால் பெரும் விபத்தை தவிர்த்தார்.

இந்த சம்பவத்தின் காட்சிகள் SG Road Vigilante என்னும் Facebook பக்கத்தில் பதிவிடப்பட்டது.

இந்தச் சம்பவம் செங்காங்கில் உள்ள புவாங்காக் டிரைவ் வட்டாரத்தில் நடந்ததாக அந்த பதிவின் தலைப்பில் கூறப்பட்டு இருந்தது.

மேலும், இந்த சம்பவம் கடந்த அக்.11 ஆம் தேதி மாலை 4:08 மணிக்கு நடந்ததாக காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற குற்றங்களுக்கு அபராதம் மற்றும் ஆறு குற்றப் புள்ளிகள் மற்றும் S$250 அபராதம் விதிக்கப்படலாம் என SPF இணைதளப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

கட்டுமான தளத்தில் கண்டெடுக்கப்பட்ட மற்றொரு போர்க்கால வெடிகுண்டு.. கட்டுமான ஊழியர்கள் வெளியேற்றம்