இஸ்ரேலில் உள்ள சிங்கப்பூரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

Singapore travel advisory condemns attacks Gaza Israel
Photo: Ministry of Foreign Affairs Singapore

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுமி உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சிங்கப்பூர் பிரதமர் போட்ட பக்கா பிளான்! எதிர்வர இருந்த பெரும் ஆபத்து?

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் (Ministry Of Foreign Affairs Spokespersons, Singapore), காசா மற்றும் இஸ்ரேலின் நிலைமை குறித்து சிங்கப்பூர் ஆழ்ந்த கவலைக் கொண்டுள்ளது. அப்பாவி பொதுமக்களின் உயிர்கள் பலியாகியிருப்பது வருத்தமளிக்கிறது. பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தவும், நிலைமையைத் தணிக்கவும், நீடித்த போர்நிறுத்தத்தை நோக்கி செயல்படவும் அனைத்து தரப்பினரையும் நாங்கள் அழைக்கிறோம். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யவும், அதனைப் பாதுகாக்கும் பொறுப்பும் அனைத்து தரப்பினருக்கும் உள்ளது.

இஸ்ரேலில் உள்ள சிங்கப்பூரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், செய்திகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை அவர்கள் பின்பற்ற வேண்டும் மற்றும் அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இஸ்ரேலில் உள்ள சிங்கப்பூரர்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளப் பக்கத்தில் பதிவு செய்யாதவர்கள் உடனடியாக http://eregister.mfa.gov.sg/ என்ற இணையதளப் பக்கத்தில் பதிவுச் செய்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சிங்கப்பூரர்களுக்கு தூதரக உதவி தேவைப்பட்டால், டெல் அவிவில் உள்ள சிங்கப்பூரின் துணை தூதரகத்தையோ (அல்லது) 24 மணி நேரமும் செயல்படும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறையையோ தொடர்புக் கொள்ளலாம்.

பாவம்!இந்தப் பூனைக்கு யாரேனும் உதவி செய்யுங்களேன் !-சிங்கப்பூரில் அவசரமாக அரியவகை ரத்தம் தேவைப்படுகிறது!

டெல் அவ்வில் உள்ள சிங்கப்பூரின் துணை தூதரகம்:
ஹபர்வெல் 34 (5வது தளம்),
டெல் அவிவ் 6971052,
இஸ்ரேல்,
தொலைபேசி எண்கள்: +972-3-647-6159, +972-3- 547-5109,
ஃபேக்ஸ்: +972-3-617-9027,
மின்னஞ்சல் முகவரி: sgleitman@gmail.com.

பாவம்!இந்தப் பூனைக்கு யாரேனும் உதவி செய்யுங்களேன் !-சிங்கப்பூரில் அவசரமாக அரியவகை ரத்தம் தேவைப்படுகிறது!

24 மணி நேரமும் செயல்படும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகம்:
டாங்லின், சிங்கப்பூர் 248163,
தொலைபேசி எண்: +65 6379 8800/8855,
ஃபேக்ஸ்: +65 6476 7302,
மின்னஞ்சல் முகவரி: mfa_duty_office@mfa.gov.sg.

இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.