பெரு நாட்டிற்கான அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களையும் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

Photo: Changi Airport

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெரு நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் காரணமாக, டிசம்பர் 14- ஆம் தேதி அன்று நாடு தழுவிய அவசர நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவசர நிலை 30 நாள் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரேகிபா (Arequipa), குஸ்கோ (Cusco) மற்றும் புனோ (Puno) ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மேலும், நிலைமையும் மோசமடைந்து வருகிறது.

சிங்கப்பூரில் பணிபுரியும் இந்தியர்கள் மகிழ்ச்சி! – வெள்ளிக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு!

எனவே, பெரு நாட்டிற்கான அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களையும் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். பெரு நாட்டிற்கு செல்லும் சிங்கப்பூரர்கள் மற்றும் அந்த நாட்டில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பெரிய கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்கவும், உள்ளூர் செய்திகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைக் கவனிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பயணிகள் விரிவான பயண மற்றும் மருத்துவக் காப்பீட்டை வாங்க வேண்டும். சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் https://eregister.mfa.gov.sg என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் பதிவு செய்யாத சிங்கப்பூரர்கள் உடனடியாகப் பதிவு செய்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

‘Grab’ நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கையால் ஊழியர்கள் அதிர்ச்சி!

தூதரக உதவித் தேவைப்படும் சிங்கப்பூரர்கள், 24 மணி நேரமும் செயல்படும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தைத் தொடர்புக் கொள்ளலாம். அதன் விவரங்கள் பின்வருமாறு;

டாங்லின், சிங்கப்பூர் 248163,
தொலைபேசி எண்: +65 6379 8800/8855,
ஃபேக்ஸ் எண்: +65 6476 7302,
மின்னஞ்சல்: maaf_duty_officer@maaf.gov.sang.

இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.