தமிழ் ஊழியர் மரணம்: நடைபாதையில் நடந்து கொண்டிருந்த அவருக்கு தெரியாது அது தான் தன் இறுதி பயணம் என்று..

tanjong-pagar-worker-dead
SCDF/Facebook.

தஞ்சோங் பகாரில் ஏற்பட்ட விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 20 வயதான ஊழியர் வினோத் குமார் உயிரிழந்தார்.

கட்டிடம் இடிந்து விழுந்தபோது வேலை நடைபெறும் இடத்திற்கு வெளியே ஊழியர் நடைபாதையில் நடந்துகொண்டு இருந்ததாக வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

“இந்திய ஊழியரின் Work pass அனுமதி புதுப்பிக்கவில்லை…” – பிஎப்ஐ-க்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டுக்கு சிங்கப்பூர் பதில்

நடைபாதையில் நடந்து கொண்டிருந்த அவருக்கு தெரியாது அது தான் தன் இறுதி பயணம் என்று.

கட்டிடம் இடிந்து விழுந்த பின்னர் ஊழியர் வினோத் காணாமல் போனதாக கூறப்பட்டது, அப்போது மணி பிற்பகல் 2 என்பது குறிப்பிடத்தக்கது.

பல மணிநேர போராட்டத்திற்கு பின்னர் மாலை 6 மணியளவில் அவர் இடிபாடுகளில் சிக்கி இருப்பது கண்டறியப்பட்டது.

ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

அவரின் இறப்புக்கு ஒட்டுமொத்த ஊழியர்களும் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தனர்.

முழு விவரங்கள்:

தஞ்சோங் பகார் கட்டிட விபத்து: காணாமல் போன 20 வயதான இந்திய ஊழியர்… 50 டன் கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கி பரிதாப மரணம்

சாதிப்பதற்காக சிங்கப்பூர் வந்த தமிழ்நாட்டு ஊழியர்; கனவுகளை களைத்த விபத்து… காரணம் என்ன?

சிங்கப்பூரில் இருந்து திருப்பத்தூர் சென்ற வினோத் குமார் உடல் – சாதிக்க வந்த இளைஞன் சவப்பெட்டியில்… கதறிய குடும்பம்