இந்திய ஊழியர் மரணம்: கிரேன் விழுந்து உடல் நசுங்கிய சோகம் – முழு விவரம்

migrant-worker-dies tengah
Complaint Singapore Unrestricted/Facebook

வெளிநாட்டு ஊழியர் ஒருவர் தெங்காவில் உள்ள கட்டுமான தளத்தில் நிகழ்ந்த வேலையிட விபத்தில் உயிரிழந்தார்.

32 வயதான இந்திய ஊழியர் நேற்று டிச.13 அன்று உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தின் படமும் வீடியோவும் Complaint Singapore என்ற பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டது.

பதிவேற்றப்பட்ட புகைப்படத்தின் அடிப்படையில், ஊழியர் மஞ்சள் நிற தொப்பி மற்றும் பச்சை நிற பாதுகாப்பு அங்கியை அணிந்திருந்தார்.

S Pass அல்லது work permit வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: ரெடியா இருங்க!

லாரியின் மேல் கிரேனின் பகுதியுடன் அவர் சிக்கி இருப்பதும் அதில் தெளிவாக தெரிகிறது.

அதே பக்கத்தில் உள்ள வீடியோ ஒன்றில், அந்த ஊழியரின் மேலே விழுந்த கனரக இயந்திரத்தின் பகுதியை மற்றொரு கிரேன் தூக்குவதையும் காண முடிந்தது.

சம்பவ இடத்திலேயே இறந்த ஊழியரை மீட்டு, உடலை எடுத்து சென்றதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) அதிகாரிகள் கூறினார்.

இந்த சம்பவத்தை மனிதவள அமைச்சகம் (MOM) உறுதிப்படுத்தியது, மேலும் கூடுதல் விவரங்களையும் வழங்கியது.

அதில் உயிரிழந்தவர் 32 வயதான இந்திய நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் இவர் Woh Hup Pte Ltd நிறுவனத்தில் பணிபுரிந்தவர்.

இதனை அடுத்து கவனக்குறைவாக ஊழியருக்கு மரணம் விளைவித்த 45 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

Video: https://www.facebook.com/watch/?v=690273009388152&t=0

லிட்டில் இந்தியாவில் உள்ள தமிழன் எக்ஸ்பிரஸ் கார்கோ நிறுவனத்தின் மீது சரமாரி புகார் – பொருளை அனுப்பிட்டு வருடக்கணக்கில் காத்திருக்கும் ஊழியர்கள் ஆதங்கம்