சிகரெட் தொடர்பான விவகாரம்.. தங்கும் விடுதி அருகே சட்டவிரோத செயல்… சிக்கிய வெளிநாட்டு ஊழியர்கள் 5 பேர்

Tuas Avenue 1 dormitory migrant workers
(Photo: AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் சட்டத்திற்கு புறம்பான முறையில் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்களை விற்பனை செய்ததாக வெளிநாட்டு நபர்கள் 5 பேர் பிடிபட்டுள்ளனர்.

துவாஸ் அவென்யூ 1 மற்றும் மாண்டாய் எஸ்டேட் அருகே நடந்த கண்காணிப்பு சோதனையில் அவர்களை கையும் களவுமாக சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள் பிடித்து கைது செய்தனர்.

ஃபோர்க்லிஃப்ட் இயந்திரம் தாக்கி காலை இழந்த ஊழியர்… நிறுவனத்துக்கு S$240,000 அபராதம்

இரு இடங்களில் மொத்தம், 53 சிகரெட்டு அட்டைப்பெட்டிகள் மற்றும் சுங்கவரி செலுத்தப்படாத 15 சிகரெட் பாக்கெட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்தமாக ஏய்ப்பு செய்யப்பட்ட சேவை மற்றும் சரக்கு வரி (ஜிஎஸ்டி) தொகை முறையே சுமார் $5,352 மற்றும் $482 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதோடு சேர்த்து மொத்தம் 3.3 கிலோ மெல்லும் புகையிலையும் பறிமுதல் செய்யப்பட்டது.

20 மற்றும் 37 வயதுக்கு உட்பட்ட ஐந்து பங்களாதேஷ் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலை முடிந்து துவாஸ் அவென்யூ 1 க்கு அருகிலுள்ள தங்கும் விடுதிகளுக்கு திரும்பிய வெளிநாட்டு ஊழியர்கள், ​​விடுதிக்கு அருகே நிறுத்தப்பட்டிருக்கும் கனரக லாரிகளுக்கு பின்புறம் இந்த சட்டவிரோத சிகரெட்களை வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அருகிலுள்ள புதர்களில், சிவப்பு பிளாஸ்டிக் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.3 கிலோ மெல்லும் புகையிலை, 45 சிகரெட் அட்டைப்பெட்டிகள் மற்றும் 10 பாக்கெட்டுகள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் அடங்கிய அட்டைப் பெட்டியை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

உதவிக்கு யாரும் இல்லாமல் ஆபத்தில் இருந்த மூதாட்டிக்கு ஓடி உதவிய வெளிநாட்டு ஊழியர் – பாராட்டு