வேலையிடத்தில் கீழே விழுந்த வெளிநாட்டு ஊழியர் – தொடரும் விபத்துகள்… தற்போது ஊழியரின் நிலை?

migrant Worker fall Orchard condominium work site
Photos: Facebook/Safety Watch

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் வேலையின்போது சுமார் 10 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தார்.

கீழே விழுந்த பங்களாதேஷ் ஊழியர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்து தற்போது நன்றாக இருப்பதாக மனிதவள அமைச்சகம் (MOM) நேற்று (டிசம்பர் 20) தெரிவித்துள்ளது.

இந்த வேலையிட விபத்து 18 தொம்லின்சன் சாலையில் நேற்று முன்தினம் திங்கள்கிழமை மாலை 3 மணியளவில் நடந்தது.

பலர் பொறாமைப்படும் அளவிற்கு மெல்லிய உடல்… 33 வயது பிரபலத்தின் கடும் முயற்சி (Video): நெட்டிசன்கள் வியப்பு

Park Nova என்னும் சொகுசு தனியார் condominium வீட்டின் கட்டுமானப் பணியின் போது இந்த விபத்து நடந்துள்ளது.

31 வயதான பங்களாதேஷ் ஊழியர் சாரக்கட்டுப் பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது 10 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே தரை தளத்தில் விழுந்தார்.

இதனால் அவரது வலது கை மற்றும் இரு தொடைகளிலும் காயங்கள் மற்றும் உச்சந்தலையில் காயங்கள் ஏற்பட்டன. அதன் பின்னர் ஊழியர் சுயநினைவுடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது அவர் நன்றாக இருப்பதாக மனிதவள அமைச்சகம் (MOM) கூறியது.

அந்த ஊழியர் Seng Yew Scaffolding and Engineering நிறுவனத்தில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெம்பனீஸில் போலீஸ் அதிரடி சோதனை – பெண் ஒருவர் கைது