ஆழமான வடிகாலில் விழுந்த சிங்கப்பூர் பெண்ணின் AirPod: கனமழையிலும் ஓடிச்சென்று உதவிய “வெளிநாட்டு ஊழியர்”!

migrant worker helping singapore woman
@10.lifts/TikTok

சிங்கப்பூர் பெண் ஒருவருக்கு உதவி செய்த வெளிநாட்டு ஊழியரை இணையதள வாசிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

பலத்த மழையின்போது, ஆழமான வடிகால் ஒன்றின் கீழே விழுந்த AirPod சாதனத்தை வெளிநாட்டு ஊழியர் தனக்கென்ன என்று பார்க்காமல் அதனை எடுத்து பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட 66 தென்கிழக்கு ஆசிய நகரங்களுக்கு விமான சேவை விரிவு – SIA, Scoot அதிரடி அறிவிப்பு

நேற்று மார்ச் 15 அன்று நடந்த சம்பவத்தின் வீடியோவை டிக்டோக்கில் Elaine Liu என்ற அந்த பெண்மணி பதிவேற்றினார். அது சுமார் 150,000 பார்வைகளை கடந்துள்ளது.

அந்த பெண் தான் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்ததாகவும், அப்போது தலைமுடியை கோதியதாகவும், இதனால் AirPod வடிகாலில் விழுந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது, வெளிநாட்டு ஊழியர் ஒருவர் அவரின் AirPod-ஐ வடிகாலில் இருந்து வெளியே எடுக்க உதவினார் என்றும் கூறியுள்ளார் அவர்.

முகுல் என்ற அந்த ஊழியர், மழை வெளுத்து வாங்கும்போது சற்றும் சுயநலத்துடன் யோசிக்காமல் ஆழமான அந்த வடிகால் உள்ளே இறங்கி AirPod-ஐ எடுத்து அந்த பெண்ணிடம் ஒப்படைத்தார்.

முகுல் செய்த செயல் அவரை மிகவும் ஈர்த்ததாகவும் இதற்கு நன்றி கூறி, அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார் அந்த பெண்.

இந்த செயலை இணையதள வாசிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும், அவருக்கு பண உதவி செய்ய வேண்டும் என சிலர் அவரின் விவரங்களையும் கேட்டறிந்தனர்.

“கையில் ஆயுதத்துடன் யாரையோ தேடிக்கொண்டிருந்த ஆடவர்” – கைது செய்யும்போது போலீஸ் மீது வீசியதால் பரபரப்பு!