துவாஸ் கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியர் மரணம் – மயக்க நிலையில் கிடந்தவர் மரணித்த சோகம்

Migrant worker unconsciousTuas Port construction dies
MPA

துவாஸ் துறைமுகம் 2ம் கட்ட கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார், பின்னர் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஜூலை 29 அன்று காலை 9 மணிக்கு நடந்ததாக சிங்கப்பூர் கடல்துறை மற்றும் துறைமுக ஆணையம் (MPA) தெரிவித்தது.

வேலை தேடும்போதும், வேலையிடத்திலும் காட்டப்படும் பாகுபாடு – சிங்கப்பூரில் குறைவாக பதிவு

மயக்கமடைந்த நிலையில் இருந்த ஊழியருக்கு வேலைத்தள பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஒருவர் CPR என்னும் உயிர்காக்கும் சிகிச்சை வழங்கியுள்ளார்.

பின்னர் தகவலறிந்து அங்குவந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, அந்த ஊழியரை தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது.

ஆனால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அதே நாளில் அவர் மரணித்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணைகள் நடந்து வருவதாகவும், தற்போது இறந்தவரின் குடும்பத்திற்கு ஆதரவு அளித்து வருவதாகவும் MPA கூறியுள்ளது.

உலகளாவிய கூட்டமைப்பு நிறுவனமான Penta Ocean-Hyundai-Boskalis கூட்டு நிறுவனத்தில் ஊழியர் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

அறியாமையால் ஏமாந்த வெளிநாட்டு ஊழியர்கள் – 3500 பேர் பணத்தை இழந்த சோகம்