KTP மருத்துவமனையில் இறந்த இந்திய ஊழியர் 11 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரிந்தவர்; ஒருவரின் வருமானத்தில் இயங்கிவந்த குடும்பம்..!

Migrant worker who died at KTPH worked in Singapore for 11 years
Migrant worker who died at KTPH worked in Singapore for 11 years

சிங்கப்பூரில் சமீபத்தில் கூ டெக் புவாட் மருத்துவமனையில், இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்திய ஆடவருக்கு சிறிய அஞ்சலி செலுத்தும் விதமாக Its Raining Raincoats முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதில் 46 வயதான அழகு பெரியகருப்பன், மருத்துவமனை படிக்கட்டில் அசைவில்லாமல் இருந்ததாகவும், பின்னர் அவர் காயங்களால் உயிரிழந்ததாகவும் கடந்த ஏப்ரல் 23 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் கூ டெக் புவாட் (Khoo Teck Puat) மருத்துவமனையில் இந்தியர் உயிரிழப்பு..!

அவர் ஒரு கோவிட் -19 நோயாளி என்பதை சுகாதார அமைச்சகம் பின்பு உறுதிப்படுத்தியது, ஆனால் அவர் உயரத்திலிருந்து வீழ்ந்ததன் காரணமாக ஏற்பட்ட பல காயங்களால் இறந்தார் என்றும் தெரிவித்தது.

மேலும், செப்டம்பர் 2009 முதல் கட்டுமான ஊழியராக அழகு பணிபுரிந்து வந்ததாகவும், தங்கும் விடுதியாக மாற்றப்பட்ட தொழிற்சாலையில் வசித்து வந்ததாகவும் மனிதவள அமைச்சகம் (MOM) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியர் மரணத்திற்கு COVID-19 நோய்த்தொற்று காரணம் இல்லை – சுகாதார அமைச்சகம் (MOH)..!

அதே போல், ஏப்ரல் 28 இன்று முகநூல் பதிவில், Its Raining Raincoats மற்றொரு வெளிநாட்டு ஊழியர் சமீபத்தில் சிங்கப்பூரில் காலமானார் என்று பதிவிட்டுள்ளது.

அதில், 37 வயதான சுப்பையா சிவசங்கர், கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயால் உயிரிழந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிங்கப்பூருக்கு அவர்கள் செய்த பங்களிப்புக்கு நன்றியை தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருக்கு அவர்கள் செய்த பல ஆண்டுகால பங்களிப்புகளுக்காக, அழகு மற்றும் சுப்பையா இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளது, அவர்கள் ஆத்மா சாந்தியடையவும் வேண்டியுள்ளது.

இருவரின் வருமானத்தில் மட்டுமே குடும்பம் இயங்கிவந்துள்ளது. மேலும் இருவரும் மனைவி மற்றும் சிறு குழந்தைகளை விட்டு இறைவனடி சேர்ந்துள்ளனர்.

Its Raining Raincoats அவர்கள் குடும்பத்துடன் தொடர்புகொண்டு ஆதரவை வழங்குவதாகவும், இந்தியாவில் உள்ள நண்பர்கள் அழகுவின் குடும்பத்தினரை சந்திக்கவும், தேவையான உதவிகளை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Rest In Peace ? We mourn the passing of Alagu Periyakarrupan and Subbiah Sivasankar last week. Alagu was the gentleman…

Posted by Itsrainingraincoats on Monday, April 27, 2020