சிங்கப்பூர் கூ டெக் புவாட் (Khoo Teck Puat) மருத்துவமனையில் இந்தியர் உயிரிழப்பு..!

(PHOTO: KHOO TECK PUAT HOSPITAL/FACEBOOK)

சிங்கப்பூரில் இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 23) காலை கூ டெக் புவாட் (Khoo Teck Puat) மருத்துவமனையில், படிக்கட்டில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்பு தொடர்பாக காலை 7.30 மணியளவில், தகவல் கிடைத்ததாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் லாரி, டாக்ஸி மற்றும் கார் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…!

இதில் 46 வயதான இந்தியர், படிக்கட்டில் அசைவில்லாமல் இருந்ததாகவும், பின்னர் அவர் காயங்களால் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் சதி வேலை ஏதும் நடைபெறவில்லை என்று தெரியவந்துள்ளது.

அந்த ஊழியர் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர் என்பதை சுகாதார அமைச்சகம் (MOH) உறுதிப்படுத்தியுள்ளது.

மனிதவள அமைச்சகத்தின் (MOM) கருத்துப்படி, அவர் செப்டம்பர் 2009 முதல், ஒரே முதலாளியின் கீழ் கட்டுமானத் ஊழியராக பணிபுரிந்தார் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், அவர் ஏன் மருத்துவமனையில் இருந்தார் என்பதை MOM குறிப்பிடவில்லை.

அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், மேலும் வெளிநாட்டு ஊழியர் மையத்துடன் இணைந்து குடும்பத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளம், மருத்துவ வசதிகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்படும் – அமைச்சர் சண்முகம்..!