சிங்கப்பூரில் S$18,888 அதிஷ்ட பரிசுத் தொகையை தட்டிச்சென்ற தமிழக ஊழியர்!

migrant-worker-win prize S$18888
Pollisum Engineering

சிங்கப்பூரில் தமிழக ஊழியர் ஒருவர் S$18,888 வெள்ளி அதிஷ்ட பரிசுத் தொகையை தட்டி சென்றுள்ளார்.

42 வயதான அவர், கடந்த மே 27 அன்று அவரின் நிறுவனம் ஏற்பாடு செய்த விளையாட்டில் வெற்றி வாகை சூடி பரிசுத் தொகையை வென்றார்.

“விவாகரத்து வேண்டும்..” – கணவர் மீது கொதிநீரை ஊற்றி தாக்கிய மனைவி.. சிங்கப்பூர் வந்து பதுங்கி இருந்து மனைவி துணிகரம்

அந்நிறுவனம் வருடாந்திர இரவு உணவு மற்றும் நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

அதில் “Go Big or Go Home” என்று அழைக்கப்படும் “Squid Game” போன்ற விளையாட்டு போட்டியில் அவர் வென்று அசத்தினார்.

Pollisum Engineering என்ற கனரக லிப்ட் மற்றும் போக்குவரத்து நிறுவனம் நடத்திய இந்த போட்டியில் சுமார் 210 ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

தமிழக ஊழியர்

இந்நிறுவனத்தில் கனரக லிப்ட் வாகன ஆபரேட்டராக பணிபுரியும் செல்வம் ஆறுமுகம் என்ற தமிழக ஊழியர் இந்த போட்டியில் அனைத்து சிறிய ஆட்டங்களிலும் வெற்றி பெற்றார்.

அதன் பின்னர் அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார், வெற்றி பரிசாக S$18,888 பண நோட்டுகள் வழங்கப்பட்டது.

இது அவருடைய 1.5 வருட சம்பளத்திற்கு சமமானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்த வீடு கட்ட ஆசை

அவர் தனது சொந்த ஊரில் நிலம் வாங்கி தனது குடும்பத்திற்கு வீடு கட்ட திட்டமிட்டுள்ளார்.

அவரின் குடும்பத்தில் மொத்தம் 17 உறுப்பினர்கள் உள்ளனர், அவர்கள் அனைவரையும் இவர் ஒருவரே பார்த்துக்கொள்கிறார்.

ஏனெனில், அவரின் மூத்த சகோதரர்கள் இருவர் மரணித்துவிட்டனர், அதனால் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் இவரே பொறுப்பாளியாக உள்ளார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள் 

அனைத்து உணவகங்கள், காப்பிக்கடைகளில் ஜூன் 1 முதல் கடும் நடவடிக்கை – மீறினால் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம்