அறியாமையால் ஏமாந்த வெளிநாட்டு ஊழியர்கள் – 3500 பேர் பணத்தை இழந்த சோகம்

migrant worker lost money scammed
Pic: AFP/Roslan Rahman

சிங்கப்பூரில் 3,500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் S$25 மில்லியன் தொகைக்கு மேல் ஊழியர்கள் இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியரின் உயிர் காக்க உதவுங்கள்: வேலையிடத்தில் விபத்து… ஆபத்தான நிலையில் ஊழியர் – உறவுகளை தேடும் நிறுவனம்

கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 10 சதவிகிதம் பேர் வெளிநாட்டு ஊழியர்கள்.

இந்த மோசடிகள் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டு பணிப்பெண்களை மட்டும் பாதிக்காது, அதோடு அவர்களை நம்பியுள்ள குடும்பங்களையும் அது கடுமையாக பாதிக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் மோசடிகளுக்கு ஆளாக நேரிடும் அபாயம் குறித்து அதிகாரிகள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதோடு, இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்ற மோசடிகளை தடுக்க ScamShield என்ற செயலி உதவும் என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல இது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் மனிதவள அமைச்சகம், போலீசுடன் இணைத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

ஒர்க் பெர்மிட்டில் கட்டுமான ஊழியராக வந்த தமிழர்… தற்போது “சிங்கப்பூர் குடிமகன்” – திருப்பு முனையாக அமைந்த ஒரு சம்பவம்