ஒர்க் பெர்மிட்டில் கட்டுமான ஊழியராக வந்த தமிழர்… தற்போது “சிங்கப்பூர் குடிமகன்” – திருப்பு முனையாக அமைந்த ஒரு சம்பவம்

Migrant worker-turned-Singapore citizen
Photo: lianhe zaobao

வெளிநாட்டு ஊழியராக சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்தவர் தற்போது சிங்கப்பூர் குடிமகனாக மாறிய கதையை பகிர்ந்துள்ளார்.

1995ம் ஆண்டு தனது 20வது வயதில் சிங்கப்பூருக்கு வந்த அவர், கட்டுமான ஊழியராக வேலை செய்து வந்தார். அப்போது நாள் ஒன்றுக்கு வெறும் 16 டாலர் மட்டுமே சம்பளமாக ஈட்டினார்.

பாலியியல் தொழில்… 200க்கும் மேற்பட்டோரை மடக்கி பிடித்த போலீஸ்

இப்போது 48 வயதாகும் திரு நடனசிகாமணி செந்தில், எப்படியாவது சம்பாதித்து சாதிக்க வேண்டும் என்று இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்ததை நினைவு கூர்ந்தார்.

“நான் சிறிய கனவுகளுடன் சிங்கப்பூர் வந்தேன். ஆனால் நான் இங்கு நிறைய வாய்ப்புகளை கண்டேன், அது எனக்கு பிடித்திருந்தது. இங்குள்ள பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு சொந்த நாடு போல என்னை கவர்ந்தது” என்று கூறினார்.

இப்போது, ​​திரு செந்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் நிறுவனமான Triple Power Engineering நிறுவனத்தின் இயக்குநராகவும், செங் சான் சமூக மன்றத்தில் இந்திய செயல்பாடுகள் நிர்வாகக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.

அவர் கட்டுமான தளத்தில் பணிபுரிந்த நேரத்தில், அங்கேயே தங்குமிடம் போல அமைத்து தங்கியதை நினைவுகூர்ந்தார். ஆனால், தற்போது ஊழியர்கள் நல்ல வசதிகளை கொண்ட தங்கும் விடுதிகளில் வசிப்பதை பற்றியும் அவர் சொன்னார்.

வாழ்க்கையில் இருந்த பல போராட்டங்களுக்கு மத்தியில், அவர் 1996 ஆம் ஆண்டு பாலிடெக்னிக் படித்து மின் நிறுவல் தகுதியையும், 1997 ஆம் ஆண்டில் ITE தகுதியையும் பெற்றார், இதனால் அவருக்கு Employment Pass கிடைத்தது.

திருப்பு முனை

திரு செந்தில் ஒரு நாள் வேலை முடிந்து திருப்பும்போது, திருட்டு சம்பவம் ஒன்றை எதிர்கொண்டதை நினைவு கூர்ந்தார்.

திருடன்.. திருடன்.., என்று ஒரு பெண் கத்துவதை செந்தில் கேட்டதாகவும், உடனே உதவிக்கு சென்று திருடனை துரத்திச் பிடித்ததையும், பின்னர் அவரை போலிசில் ஒப்படைத்ததையும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் அவருக்கு பொதுமக்கள் மற்றும் போலீஸ் தரப்பில் இருந்து பாராட்டு கிடைத்ததாகவும் அதுவே அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது என்றும் கூறியுள்ளார்.

அந்த பாராட்டு அவருக்கு சமூகத்தில் மேலும் பல நற்காரியங்களை செய்ய ஒரு உந்துதலை கொடுத்ததாக அவர் கூறினார்.

அதன் பின்னர் அவர் 2000 இல் Whampoa Community Club (CC) இல் தன்னார்வத் தொண்டரானார். மேலும் 2004 இல் செங் சான் சமூக மன்றத்தில் உறுப்பினரானார்.

மேலும் படிப்புகளை தொடந்த அவர், தன் தகுதியை மேலும் வளர்ந்துகொண்டே சென்றார்.

பின்னர் 2001 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் நிரந்தரவாசி ஆனார் அவர். இறுதியாக 2008 இல் சிங்கப்பூரின் குடியுரிமையையும் பெற்றார்.

பட்டம் பெற்று தொழில்முறை பொறியாளராக வேண்டும் என்பதே தனது கனவு என்று திரு செந்தில் கூறினார்.

அவரும் அவரின் சந்ததியும் சிங்கப்பூருக்கு கடமைப்பட்டுள்ளதாகவும், எங்களுக்கு சிங்கப்பூர் அளித்த சிறப்புகளை நாங்கள் திருப்பி சேவையாக செய்வோம் என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

போதைப்பொருள் கடத்தல்: இருவருக்கு மரண தண்டனை – சட்டம் அனைவருக்கும் சமம்