வெளிநாட்டு கட்டுமான ஊழியர்களுக்கு அதிக தேவை… தொடரும் கட்டுப்பாடுகள் – அதிக சம்பளம் கொடுக்க முதலாளிகள் ரெடி!

new-portal-enables-lower-wage workers
Pic: AFP

சிங்கப்பூரில் கடந்த 2021ஆம் ஆண்டில் வேலை வாய்ப்பு மிக அதிகமாக பதிவாகியுள்ளதாக மனிதவள அமைச்சகத்தின் (MOM) வேலை காலியிடங்கள் அறிக்கை கூறுகிறது.

அவற்றில் தொழில் வல்லுநர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் (PMET) ஆகிய வேலைகள் உட்பட அதிக தேவை கடந்த ஆண்டில் இருந்துள்ளது என அறிக்கையில் MOM கூறியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அரிய வாய்ப்பு: குறைந்த வருமானம் கொண்ட ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள் – இலவசம்!

PMET அல்லாத வேலை வாய்ப்புகளின் நிலவரத்தை எடுத்து பார்த்தால், 2021ஆம் ஆண்டில் கட்டுமான ஊழியர்களுக்கு அதிக தேவை இருந்தது.

ஏனெனில், வெளிநாட்டு ஊழியர்களின் நுழைவு அனுமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக மனிதவள பற்றாக்குறை ஏற்பட்டது.

ஆனால், சிங்கப்பூரின் எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதால் இது எளிதாக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுதோறும் வெளியிடப்படும் வேலை காலியிடங்கள் குறித்த இந்த விரிவான அறிக்கை, செப்டம்பர் 2021ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்டது.

மேற்கண்ட அந்த வேலைகளுக்காக முதலாளிகள் மேலும் கூடுதல் சம்பளம் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால், நீடிக்கும் work permit கட்டுப்பாடுகளால் ஊழியர்கள் சிங்கப்பூர் வருவதில் சிக்கல்கள் நிலவி வருவதாக கூறப்பட்டுள்ளது.

சொந்த நாடு செல்ல முடியாமல் தவித்து வரும் வெளிநாட்டு ஊழியர்கள்.. “நான் என் ஊருக்கு போறேன்” மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வெளிநாட்டவர் – வைரல் வீடியோ!