சிங்கப்பூரில் சுமார் 450,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தொடர்பு கண்டறியும் சாதனங்கள்!

Migrant workers contact-tracing devices
(Photo: TODAY)

சிங்கப்பூரில் சுமார் 450,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தொடர்பு கண்டறியும் சாதனங்கள் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் அல்லது கட்டுமான, கடல் மற்றும் செயல்முறை துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் சாதனங்கள் விநியோகிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் 3ஆம் கட்டம்: வெளிநாட்டு ஊழியர்களுக்கு…!

இந்த சாதனங்கள், நோய்த்தொற்று கண்டறியப்பட்டவுடன் அவர்களை தனிமைப்படுத்தவும், மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் மற்றும் மனிதவள அமைச்சகம் கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன.

பயன்படுத்த ஏற்றது

ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் எதையும் அது பதிவு செய்யாது.

சாதனம் பயன்படுத்த கச்சிதமானதாகவும், மேலும் நீர் புகாத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது நிலைமை சீராக உள்ள நிலையில், விழிப்புணர்வு இன்னும் தேவை என்றும், மேலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

3ஆம் கட்டத்தை நோக்கிச் செல்லும் இந்த சூழலில், பாதுகாப்பான வேலை, வசிப்பிட வசதிகளை வெளிநாட்டு ஊழியர்களுக்கு அமைத்துத்தர அரசாங்கம் முயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிப்பெண்ணை கொலை செய்த வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…