வெளிநாட்டு ஊழியர்களுக்கான தளர்வுகள்: எங்கே மாஸ்க் போடணும், போடக்கூடாது, ART, குழு, மது வரம்பு உள்ளிட்ட அனைத்துக்கும் விடை – விரிவான பதிவு!

new work permit CMP Employers provide proof of stay
Photo: Today

தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் நாளை ஏப்ரல் 1 முதல் பொழுதுபோக்கு நிலையங்களுக்கு செல்ல “Exit pass” என்னும் வெளியேறும் முன்-அனுமதிக்கு விண்ணப்பிக்கத் வேண்டியதில்லை.

மேலும், சிங்கப்பூர் சமூக மக்களுக்காக மார்ச் 24 அன்று அறிவிக்கப்பட்ட கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் பொருந்தும்.

சிங்கப்பூரில் இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழப்பு – துவாஸ் கப்பல் தளத்தில் நடந்த சம்பவம்

முகக்கவசம் அணிதல்

அனைத்து உட்புற இடங்களிலும் முகக்கவசம் அணிவது தொடர்ந்து கட்டாயமாக இருக்கும்.

வெளிப்புற இடங்களிலும், ஊழியர்களின் சொந்த தங்குமிட அறைகளிலும் இது விருப்ப தெரிவாக இருக்கும்.

முகக்கவசம் அணிவது விருப்பமானது என்றாலும், ஊழியர்கள் தங்களையும் மற்றவர்களையும் பாதுகாப்பதற்காக, குறிப்பாக நெரிசலான பகுதிகளில், முகக்கவசங்களை தொடர்ந்து அணிவதை MOM ஊக்குவிக்கிறது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான கோவிட்-19 விதிமுறைகள் அதிரடி தளர்வு – என்னென்ன? வாங்க பார்ப்போம்!

கட்டாயம் மற்றும் விருப்பம் – எடுத்துக்காட்டுகள்:

வெளிப்புறங்களில் (முகக்கவசம் அணிவது விருப்பமானது)

  • பொதுவான நடைபாதை
  • திறந்தவெளி படிக்கட்டு
  • வெளிப்புற விளையாட்டு வசதிகள்
  • வெளிப்புற உடற்பயிற்சி வசதி

உட்புறம் (முகக்கவசம் அணிவது அவசியம்)

  • பொது சமையல் வசதிகள்
  • கேன்டீன்
  • மினிமார்ட்டுகள்
  • லிஃப்ட்
  • மூடிய படிக்கட்டுகள்
  • ஜிம்கள்
  • பொழுதுபோக்கு அறை

குழு அளவுகள்

சமூக அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு விதி போலவே, ஊழியர்கள் 10 பேர் வரை குழுக்களாக கூடலாம்.

இடத்தின் திறனைப் பொறுத்து ஊழியர்கள் திறன் எண்ணிக்கை வரம்புகள் இருக்கும்.

மது விற்பனை

மதுபானக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் மதுபான உரிமத்தின் நடைமுறையில் உள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தங்கும் விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு நிலையங்களில் உள்ள beer gardens போன்ற உணவு மற்றும் பான விற்பனை நிலையங்கள் இரவு 10.30 மணிக்குப் பிறகு தொடர்ந்து மதுவை வழங்கலாம்.

ஊழியர் ஒருவருக்கு நான்கு பீர் கேன்கள் என்ற வரம்பும் நீக்கப்பட்டுள்ளது.

Exit pass

பொழுதுபோக்கு நிலையங்களுக்கு செல்ல விரும்பும் ஊழியர்கள் Exit pass-க்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.

அவர்கள் எந்த நேரத்திலும் பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்லலாம்.

தடுப்பூசி போடாத ஊழியர்கள் மட்டுமே Exit Passக்கு தொடர்ந்து விண்ணப்பிக்க வேண்டும்.

தடுப்பூசி போடாத ஊழியர்கள், வருகைக்கு 24 மணி நேரத்திற்குள் “ART சோதனையில் நெகட்டி” முடிவைக் காட்ட வேண்டும்.

ART சோதனை

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள் சமூகத்திற்குச் செல்வதற்கு முன்பு ART சோதனை எடுக்க வேண்டிய அவசியமில்லை.

“மதுரை-சிங்கப்பூர்” விமான சேவை.. ஊழியர்களை உள்ளே வைத்து பூட்டிய அதிகாரிகள் – விமான சேவை தடை ஏற்படும் அபாயம்!