சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் முதலாளிகளுக்கு எச்சரிக்கை

Ministry of Manpower

சிங்கப்பூரில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மனிதவள அமைச்சகம் (MOM) அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டது.

அப்போது, உலோக வேலை தொடர்பான நிறுவனங்களில் பல பாதுகாப்பு குறைபாடுகளை அது கண்டறிந்தது.

வாகனம் மோதி சிறுவன் மரணம் – ஓட்டுனருக்கு சிறை, அனைத்து வகுப்பு ஓட்டுநர் உரிமமும் ரத்து

அக்டோபர் மற்றும் நவம்பர் இடையே 650 க்கும் மேற்பட்ட ஆய்வுகளை நடத்திய அமைச்சகம், அதில் மொத்தம் S$32,000 அபராதம் விதித்தது.

மேலும், விதிமுறை மீறியதற்காக 498 எச்சரிக்கைகளையும் அமைச்சகம் வழங்கியது. அதோடு 14 உலோக வேலை நிறுவனங்களுக்கு குற்றப் புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது.

Ministry of Manpower

நிறுவனங்களில் முதலாளிகளும், ஊழியர்களும் விதிகளை மீறியதாகவும், அது தொடர்பான படங்களையும் அமைச்சகம் பகிர்ந்துள்ளது.

இயந்திரங்கள் மற்றும் கூர்மையான பிளேடுகளின் சுற்றும் பாகங்களும் பாதுகாப்பின்றி அப்படியே இருந்தன, இதனால் ஊழியர்களின் கையோ, உடல்பாகமோ துண்டிக்கப்படுவது போன்ற கடுமையான காயங்களுக்கு அவர்கள் ஆளாக நேரிடும் அபாயம் இருந்ததாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

Ministry of Manpower

2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பெரிய காயங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவை உலோக வேலைத் துறையில் ஏற்பட்டதாக அமைச்சகம் கூறியது.

Ministry of Manpower
Exposed machine parts, improper storage among safety lapses by metalworking firms
Ministry of Manpower

சிங்கப்பூரில் “2024 புத்தாண்டு வாணவேடிக்கை” – 14 இடங்களில் கொண்டாட்டம்.. முழுத் தொகுப்பு