வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரி… அடுத்த ஆண்டு முதல் புதிய நடைமுறைகள் எதிர்பார்ப்பு

Budget 2024 foreign workers
Pic: AFP

சிங்கப்பூர்: வெளிநாட்டு ஊழியர்களை வேலையிடங்களுக்கு ஏற்றிச்செல்லும் லாரிகளில் வேகக்கட்டுப்பாடு உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் அதிகப்படுத்த வேண்டும் என சிங்கப்பூர் அரசாங்கம் சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், அதன் பணிகள் எப்படி போய் கொண்டிருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுந்தது, அதாவது திரு மெல்வின் யோங் (Melvin Yong) அந்த கேள்வியை எழுப்பினார்.

சமூக ஊடங்களில் எதைவேனாலும் இனி எழுத முடியாது – சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

இதற்கு பதிலளித்த உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கா. சண்முகம்; அது குறித்த மதிப்பிட்டு பணிகளை போக்குவரத்து காவல்துறை மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மேற்கொள்ளவதாக குறிப்பிட்டார்.

அதாவது 3,500 கிலோ முதல் 12,000 கிலோ வரை எடையுடைய லாரிகளுக்கு வேக வரம்பு கட்டுப்பாட்டு கருவிகள் கட்டாயமாக பொருத்தபட வேண்டும் என போக்குவரத்து அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தது.

அதற்கு ஆகும் செலவுகள் குறித்து மதிப்பீடு நடந்து வருவதாகவும், ஏனெனில் சிறிய நிறுவனங்களும் லாரிகள் மூலம் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி செல்வதாக அவர் கூறினார்.

ஆகையால், அந்நிறுவனங்களால் செலவுகளை சமாளிக்க முடியுமா ? என்ற கோணத்தில் கருத்தாய்வுகள் நடந்து வருவதாக அவர் சொன்னார்.

அடுத்த ஆண்டு முதல் அதனை நடைமுறைப்படுத்த திட்டம் தயாராகும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுமார் 11,000க்கும் மேலான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Facebook – Meta