விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்: கட்டுப்பாடு கூடுதல் தளர்வால் வெளியில் சென்று மகிழ்ந்தனர்!

(Photo Credit : Singapore Sports Hub)

தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமானோர் வெளியில் செல்ல அனுமதிக்கப்படும் முதல் வார இறுதி இதுவாகும்.

கோவிட்-19 கட்டுப்பாடுகள் கூடுதலாக தளர்த்தப்பட்டுள்ளதால், அவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இனி தடை இல்லாமல் செல்லலாம் என்றும் கூறப்பட்டது.

கட்டுமானம், கடல் துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் இந்த திட்டத்தின் மூலம் சிங்கப்பூர் வரலாம்!

தங்கும் விடுதிகளில் வசிக்கும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 3,000 வெளிநாட்டு ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் பொது இடங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று கடந்த மாதம் நடுவில் அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் வாரத்திற்கு சுமார் 21,000 ஊழியர்கள் வெளியே சென்றுவர முடியும். முன்னர், வாரத்திற்கு 3,000 ஊழியர்கள் மட்டுமே வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், வெளியில் சென்ற வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் தங்கள் நண்பர்களை சந்தித்து, அவர்களுடன் உணவு அருந்தி, அரட்டை அடித்து மகிழ்ந்தனர்.

ஊழியர்கள் லிட்டில் இந்தியா அல்லது கெயிலாங் செராய்க்கு மட்டும் செல்லவேண்டிய கட்டுப்பாடுகள் இனி இல்லை, அவர்கள் விரும்பும் இடத்திற்குச் செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் வரும் பயணிகள் தவிர்க்க வேண்டிய அதி முக்கியமான விஷயங்கள்! இதனால் கசையடி தண்டனை கூட விதிக்கப்படலாம்!