ஓடி உதவும் வெளிநாட்டு ஊழியர்கள் – “உதவி செய்வது ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று” – பாராட்டும் சிங்கப்பூர் மக்கள்

ஓடி உதவும் வெளிநாட்டு ஊழியர்கள் பாராட்டும் சிங்கப்பூர் மக்கள்
SGFollowsall/instagram

ஆங் மோ கியோவில் வயதான பாதசாரி சாலையை கடக்க உதவிய வெளிநாட்டு ஊழியருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இது தொடர்பான காணொளி ஒன்று sgfollowsall என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

‘வெளிநாட்டு ஊழியர்களை இப்படித்தான் நடத்த வேண்டுமா?’ – கனமழையின்போது லாரியில் பயணம்: கவலைகொண்ட சிங்கப்பூரர்கள்

முதியவர் ஒருவர் சாலையை சிரமப்பட்டு கடப்பதை கண்ட அந்த ஊழியர் ஓடி உடனே சென்று பொறுமையாக முதியவர் சாலையை கடக்க உதவினார்.

பரபரப்பான இந்த காலகட்டத்தில் உதவி செய்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவு தான்.

அப்படி இருக்கையில், கைத்தடியுடன் முதியவரை பொறுமையாக அழைத்து சென்ற ஊழியர் பாராட்டுக்கு முழு தகுதி படைத்தவர் என்றே கூறலாம்.

அது மட்டுமல்லாமல், சமீபத்தில் இரு வெளிநாட்டு ஊழியர்கள் சுமார் 4 மணிநேரம் செலவழித்து தாய்-மகள் தொலைத்த போன் மற்றும் வயலினை கண்டுபிடிக்க உதவியது அனைவராலும் மிகுந்த பாராட்டை பெற்று தந்தது.

மற்றவர்களுக்கு உதவுவது என்பது பெரும்பாலான ஊழியர்களின் ரத்தத்தில் ஊறிய ஒரு விஷயம் என்று சக ஊழியர்களே கருத்து கூறுகின்றனர்.

Video: https://www.facebook.com/watch/?v=810159417274874

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

Work permit வேலை அனுமதியில் இப்படியும் மோசடி நடக்கும்.. சிக்கிய வேலைவாய்ப்பு முகவருக்கு சிறை