“வேலைல இருக்கணும்னா இத செய்”… 1 முதலாளிக்கு 5 வெளிநாட்டு ஊழியர்கள் பாதிப்பு – 100 முதலாளிகளுக்கு செக்!

(PHOTO: TODAY)

சிங்கப்பூரில் தவறிழைத்த சுமார் 102 முதலாளிகளுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கையை மனிதவள அமைச்சகம் (MOM) எடுத்துள்ளதாக மனிதவள மூத்த அமைச்சர் கோ போ கூன் ( Koh Poh Koon) இன்று (மார்ச் 1) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதாவது, 2016 மற்றும் 2020க்கு இடையில் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு ஊழியர்களிடம் இருந்து “கிக்பேக்” எனப்படும் சட்டத்திற்கு புறம்பான ஆதாயம் பெற்றதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ரிமோட் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா? – சிங்கப்பூர் நிறுவனங்களின் குறைந்த சம்பள போக்கு ஒரு காரணமா?

கிக்பேக்

இதில் சராசரியாக, ஒரு முதலாளிக்கு ஐந்து வெளிநாட்டு ஊழியர்கள் என பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கிக்பேக் என்னும் சட்டத்திற்கு புறம்பான பணம் என்பது வழக்கமாக முதலாளிகள் மேற்கொள்ளும் நரி தந்திர செயலாகும்.

இந்த பணம்,  நிபந்தனையாகவோ அல்லது வேலைவாய்ப்புக்கான உத்தரவாதமாகவோ வெளிநாட்டு ஊழியர்களிடம் மிரட்டி பறிக்கப்படும்.

இதில்,” S$1,000 முதல் S$3,000 வரை கிக்பேக் என்னும் சட்டத்திற்கு புறம்பான பணம் வசூல் செய்யப்படலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் என்ஜின் (PAP-Nee Soon) கேள்விகளுக்கு பதிலளித்த டாக்டர் கோ கூறினார்.

அனைத்து விமானங்களையும் காலவரையின்றி நிறுத்திவைத்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் – குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும்!

புதிய வேலை

2016 மற்றும் 2020க்கு இடையில், பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களில் சுமார் 20 சதவீதம் பேர் புதிய வேலை வாய்ப்பைக் பெற்றுள்ளனர்.

அதே போல, கிக்பேக் பிரச்சனை தீர்க்கப்பட்ட பிறகு ஏறக்குறைய 30 சதவீதம் பேர் அவர்களின் தற்போதைய முதலாளியிடம் தொடர்ந்து வேலை செய்கின்றனர்.

மீதமுள்ள ஊழியர்கள் சொந்த நாடு திரும்பத் தேர்வு செய்தனர் என டாக்டர் கோ ஹவுஸில் கூறினார்.

சிங்கப்பூரில் “தடுப்பூசி தகுதி” நிலையை இழந்த Work pass அனுமதி ஊழியர்கள்… எவ்வளவு பேர் தெரியுமா?