புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!

Photo: Singapore Ministry Of Manpower

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (Singapore Ministry of Manpower) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “கடந்த ஆண்டு இறுதியில் சிங்கப்பூரில் தங்கிப் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொண்டாடிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒருமுறை திரும்பிப் பார்ப்போம்.

சிங்கப்பூர் பாதுகாப்புதுறை அமைச்சரைச் சந்தித்த இந்தோனேசிய விமானப் படையின் தலைமைத் தளபதி!

‘AGWO’ என்றழைக்கப்படும் ‘Alliance of Guest Workers Outreach’ நிறுவனம், எங்கள் தங்குமிடங்களில் ஒன்றில் கிறிஸ்துமஸ் மரத்தை அமைத்து, எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பராமரிப்புப் பாக்கெட்டுகளை (Care Packs) விநியோகித்தது.

Dormitory ஆபரேட்டரான, ‘McKnight Engineering Pte Ltd’ உடன் இணைந்து, அவர்கள் சிங்கப்பூர் ஃப்ளையர் (Singapore Flyer) மற்றும் புத்தாண்டு ஈவ் (New Year’s Eve) பயணத்திற்கு நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் அழைத்து வந்தனர். வெஸ்ட்லைட் டோ குவானில் (Westlite Toh Guan), விளையாட்டுகளுடன் ஒரு மினி கார்னிவல் அமைக்கப்பட்டது மற்றும் “சாண்டா கிளாஸ்” வேடமணிந்த தன்னார்வலர்கள் பரிசுகளை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கினர்.

திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவை- ஜனவரி மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

நார்த்லேண்ட் ஆரம்பப் பள்ளி (Northland Primary School) மாணவர்களும் எங்கள் தொழிலாளர்களுக்கு மனதைக் கவரும் நிகழ்ச்சியை அர்ப்பணித்தனர். எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாட முன்வந்த பலதரப்பட்ட கூட்டாளிகளைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

எங்கள் தொழிலாளர்களை நினைத்து அவர்களுடன் பண்டிகை மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி! இந்தப் புத்தாண்டில் உங்களுடன் மேலும் பல செயல்பாடுகளைத் தொடர்ந்து திட்டமிட நாங்கள் எதிர்நோக்குகிறோம்!” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.