தங்கும் விடுதி, கட்டுமான துறையில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் இது கட்டாயம்!

(AFP/Roslan RAHMAN)

முதலாளிகள் தங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முதன்மை பராமரிப்புத் திட்டத்தை (Primary care plan) வரும் ஏப்ரல் மாதம் முதல் கட்டாயம் வாங்க வேண்டும்.

அதாவது, ஊழியர்களின் Work pass அனுமதிக்கான தேவைகளின் ஒரு பகுதியாக அதனை வாங்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) நேற்று (பிப் 19) அறிவித்தது.

சிங்கப்பூரில் குறைந்த சம்பளம் பெறும் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் 3 முக்கிய பிரச்சனைகள் – அதற்கான தீர்வுகள்!

தங்கும் விடுதிகளில் வசிக்கும் Work permit மற்றும் S Pass அனுமதி வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தும்.

அதோடு மட்டுமல்லாமல், கட்டுமானம், கடல் தளம் மற்றும் செயல்முறைத் துறைகளில் (Process sectors) பணிபுரிபவர்களுக்கும் இது பொருந்தும் என்று MOM தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தில் ஆண்டுக்கு சுமார் S$138 வரை செலவாகும், இது மேற்கண்ட ஊழியர்களுக்கான பெரும்பாலான முதன்மை பராமரிப்புத் தேவைகளை உள்ளடக்கும்.

இதில் work pass அனுமதி விண்ணப்பத்திற்கான மருத்துவப் பரிசோதனைகள் அல்லது புதுப்பித்தல், கடுமையான அல்லது நாள்பட்ட மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் ஆகியவை அடங்கும்.

இந்த ஆண்டு ஏப். 1 முதல்…

புதிதாக வந்துள்ள தகுதியுடைய வெளிநாட்டு ஊழியர்களின் முதலாளிகள், அல்லது work pass அனுமதிச் சீட்டைப் புதுப்பிக்கும் அல்லது முதலாளிகளை மாற்றும் ஊழியர்கள், புதிய work pass அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுவதற்கு முன் இந்த திட்டத்தை வாங்க வேண்டும்.

பட்ஜெட் 2022 சிறப்பம்சங்கள் – நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன.? வெளிநாட்டு ஊழியர்கள்…