பட்ஜெட் 2022 சிறப்பம்சங்கள் – நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன.? வெளிநாட்டு ஊழியர்கள்…

Pic: TODAY

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் 2022 – 2023ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று (பிப்.08) பிற்பகல் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில், செப் 01, 2022 முதல் எம்ப்ளாய்மென்ட் பாஸ் (EP) வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் S$4,500-லிருந்து S$5,000ஆக உயர்த்தப்படும் என்றும், S Pass வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் S$2,500-லிருந்து S$3,000 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி மேலும் பல முக்கிய அம்சம்களும் அறிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள்!

நிதியாண்டிற்கான பட்ஜெட்டின் முக்கிய சிறப்பம்சங்கள்:

  • பொருள்கள் மற்றும் சேவைகள் மீதான வரி 2023, 2024ம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக 7 விழுக்காட்டில் இருந்து 9 விழுக்காடாக உயர்த்தப்படவுள்ளது.
  • பொருள்கள் மற்றும் சேவைகள் மீதான வரி அதிகரிப்பை ஈடுகட்ட $6.6 பில்லியன் மதிப்பிலான உத்தரவாதத் தொகுப்புத் திட்டம்.
  • புதிய Employment Pass, S Pass விண்ணப்பதாரர்களுக்குக் குறைந்தபட்ச தகுதி ஊதியம் உயர்வு.
  • சுமார் $500 மில்லியன் மதிப்பில் வேலை, தொழில் ஆதரவுத் தொகுப்புத் திட்டம்
  • சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உற்பத்தித் திறன் தீர்வுகள் மானியமாக நான்கு ஆண்டுகளுக்கு சுமார் $600 மில்லியன்.
  • படிப்படியான சம்பள உயர்வு முறை மேலும் பல துறைகளுக்கு விரிவாக்கம்.
  • சுமார் $560 மில்லியன் மதிப்பில் குடும்பங்களுக்கான ஆதரவுத் திட்டம்.
  • அனைத்துலக விமானத்துறை மையம் என்ற நிலையைத் தக்க வைக்க விமானத்துறை ஆதரவுத் திட்டம்.
  • வருமானம் ஈட்டுவோரில் முதல் 1.2% விழுக்காட்டினருக்கு வருமான வரி விகிதம் அதிகரிப்பு.
  • பணி ஓய்வுக்காலத்திற்கான மத்திய சேமநிதி அடிப்படைத் தொகை 5 ஆண்டுகளுக்கு ஆண்டிற்கு 3.5% உயர்த்தப்படும்.

சிங்கப்பூரில் Employment Pass வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் உயர்வு..!