சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள்!

Photo: Minister Lawrence Wong Official Facebook Page

2022- ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை சிங்கப்பூர் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் (Singapore Finance Minister Lawrence Wong) நேற்று (18/02/2022) பிற்பகல் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, உரையாற்றினார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. அதில், சிலவற்றை விரிவாகப் பார்ப்போம்!

எங்கே கிடைக்கும்? சிங்கப்பூரில் இந்த பண நோட்டு உங்க கையில் இருந்தால் நீங்க தான் ராஜா! – $10000 singapore dollar note

சிங்கப்பூரில் தற்போது நடைமுறையில் இருக்கும் 7% ஜிஎஸ்டி (Goods And Service Tax- ‘GST’) அடுத்த இரண்டு ஆண்டுகளில் படிப்படியாக உயர்த்தப்படுகிறது. அதன்படி, வரும் 2023- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1- ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி 8% ஆகவும், 2024- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1- ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி 9% ஆகவும் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானங்களைக் கொண்ட குடும்பங்கள் ஜிஎஸ்டியால் பாதிக்கப்படாத வகையில், 6.6 பில்லியன் சிங்கப்பூர் டாலர் செலவில், அவர்களுக்கு ஜிஎஸ்டி வவுச்சர்கள், சிடிசி வவுச்சர்கள் வழங்கப்படும். அதன் மூலம், அவர்கள் தங்களது அன்றாட செலவுகளை சமாளிக்க முடியும் எனக் கருதப்படுகிறது.

சிங்கப்பூரில் உள்ள பணக்காரர்கள், தொழிலதிபர்களின் வருமான வரி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அவர்கள் வாங்கும் ஆடம்பட சொத்துகள் மற்றும் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றிற்கான வரி விகிதமும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

S$1,000 & வேலை அனுமதி அடங்கிய பர்ஸை தொலைத்து கலங்கிய வெளிநாட்டு ஊழியர்… கடவுள் போல வந்து உதவிய சக ஊழியர்!

விலை உயர்ந்த வாகனங்களுக்கான வரி உயர்த்தப்படுகிறது. இதனால் இனி விலை உயர்ந்த வாகனங்களை வாங்குவோர் அதிக வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை சமாளிக்கும் வகையில், சிறு, குறு, நடுத்தர தொழிற் நிறுவனங்களுக்கு கைகொடுக்க சுமார் 500 மில்லியன் சிங்கப்பூர் டாலர் நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் எம்ப்ளாய்மென்ட் பாஸ் (Employment Pass) வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் 4,500 சிங்கப்பூர் டாலரில் இருந்து 5,000 சிங்கப்பூர் டாலராக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு வரும் செப்டம்பர் 1- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

நிதிச் சேவைத் துறையில் எம்ப்ளாய்மென்ட் பாஸ் வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் 5,000 சிங்கப்பூர் டாலரிலிருந்து 5,500 சிங்கப்பூர் டாலராக உயர்த்தப்படுகிறது.

வெளிநாட்டில் இருந்து பொருட்களை வாங்கி ஆன்லைனில் சட்டவிரோதமாக விற்ற 10 பேருக்கு அபராதம்!

எஸ் பாஸ் வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கான (S Pass) குறைந்தபட்ச சம்பளமும் 2,500 சிங்கப்பூர் டாலரில் இருந்து 3,000 சிங்கப்பூர் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. சம்பள உயர்வு வரும் செப்டம்பர் 1- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுப்போன்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் சிங்கப்பூர் அரசின் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.