“தங்கும் விடுதியில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு முன், “ஓமிக்ரான்” பற்றி புரிந்து கொள்ள அதிக நேரம் தேவை”

வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வேலை
Photo: Roslam Rahman/AFP/Getty Images

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமானோர் கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்கின்றனர், தகுதியுடைய ஊழியர்களில் 88 சதவீதம் பேர் கூடுதல் டோஸைப் பெற்றுள்ளனர்.

இதில் தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்களும், மற்ற வகை தங்குமிடங்களில் வசிக்கும் கட்டுமான, கடல் மற்றும் செயல்முறைத் துறையில் உள்ள ஊழியர்களும் அடங்குவர்.

சிங்கப்பூரில் சுமார் 20 வருடங்கள் பணிபுரிந்த வெளிநாட்டவர் – இறுதியாக சொந்த வீடு கனவு நிறைவேறியது!!

ஊழியர்கள் தங்கள் இரண்டாவது தடுப்பூசி டோஸ் பெற்ற 150 நாட்களுக்குப் பிறகு கூடுதல் டோஸ் போட்டுக்கொள்ள தகுதி பெறுகின்றனர்.

மேலும், அவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி திட்டம் அக்டோபர் மாதம் கிராஞ்சி தடுப்பூசி நிலையத்தில் தொடங்கப்பட்டது.

தங்கும் விடுதி குடியிருப்பாளர்களிடையே ஏற்கனவே அதிக பூஸ்டர் விகிதம் மற்றும் அதிக தடுப்பூசி விகிதம் இருந்தாலும் கூட, கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு முன், புதிய ஓமிக்ரான் மாறுபாட்டைப் புரிந்து கொள்ள அதிக நேரம் தேவை என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வியாழக்கிழமை (டிசம்பர் 16) தெரிவித்தார்.

“நாங்கள் நிலைமையை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்,” என்று அவர் சனிக்கிழமையன்று வரும் சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்திற்கு முன்னதாக ஒரு நேர்காணலில் கூறினார்.

சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பிய வெளிநாட்டு பாலியல் தொழிலாளி – “PASS”காக அதிகாரிக்கு கட்டணமின்றி பாலியல் சேவை